ETV Bharat / state

மாமியாரை காய் அரியும் கத்தியால் குத்திய மருமகள்.. கணவன் - மனைவி இருவருக்கும் நிபந்தனை ஜாமீன்! - Daughter in law arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 5:07 PM IST

Daughter-in-law arrest: ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் மாமியாரை கத்தியால் தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜெகதீஸ்வரி
ஜெகதீஸ்வரி (Credits - ETV Bharat Tamil Nadu)

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு பஜனைக் கோயிலைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், சென்னை பெரம்பலூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி (33) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் சம்மதமின்றி, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவருக்கும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவ்வப்போது தகராறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, மீண்டும் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆவேசமடைந்த கணவர் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக மனைவி அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரிக்கும், அவரது மாமியார் கொள்ளாபுரி (63) என்பவருக்கும் இன்று காலை வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரி, மாமியாரை காய் அரியும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் அறுத்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக கொள்ளாபுரி அவளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகதீஸ்வரியை கைது செய்தனர். பின்னர் வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : சீமான் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.. விரைவில் சம்மன்! - case reg against Seeman under SC ST

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.