தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், 10ம் திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டித்தின் சுற்றுவட்டார பகுதிகளாம சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பகுதியில் எங்கு சென்றாலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது.
இந்த நிலையில் சாத்தான் குளம் அருகே உள்ள உசரத் குடியிருப்பு பகுதியில், தசரா குழு சார்பாக சின்னத்திரை நடிகைகள் விஜய் டிவி பிரபலங்கள் சில்பா, சிவானிமாயா, ஜஸ்டினா மற்றும் அர்ச்சனா, ராம் ஆகிய பிரபலங்களும் வந்து நடனம் ஆடினர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் கூலிங் கிளாஸ் கண்ணாடியை மாட்டிக் கொண்டு குத்தாட்டம் போட்டு அசத்தினார்.
இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் 500 ரூபாய் நோட்டை சிறுமிக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். இதே போல் சின்னத்திரை நடிகையிடம் ஒரு சுட்டி குழந்தை ஒன்று சேட்டை செய்து கொண்டிருந்தது. பின்னர் அங்கு ஒரு சினிமா பாடல் ஒலிக்கப்பட்டது, அதற்கு ஏற்றார் போல் அந்த பெண் குழந்தைக்கு, சின்னத்திரை நடிகைகள் நடனம் செல்லி கொடுக்க குழந்தை அதை போல் நடனம் ஆடியது. இதனை மகிழ்ச்சியுடன் அங்கிருந்தவர்கள் கண்டுகழித்தனர்.
இதையும் படிங்க: மைசூர் தசரா கொண்டாட்டம்: கவர்ச்சிகரமான காட்சிகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்!
குலைசை தசரா: மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான விழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்.12ஆம் தேதி நள்ளிரவு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.
இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள் என கூறப்படுகிறது. இந்த திருவிழாவின் நிறைவாகதான் குலசேகரன்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்