ETV Bharat / state

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - DA HIKE FOR TN GOVT STAFF

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு தலைமைச் செயலகம் (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 4:18 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் , இதனை கனிவுடன் பரிசீலித்து முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. கூடுதல் செலவு ஏற்பட்டாலும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.