ETV Bharat / state

"திமுக கூட்டணியின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" - சிவி சண்முகம்!

போதை பொருள் கடத்தல் குறித்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணி தர்மத்துக்காக வாய் பேசாமல் உள்ளதாகவும், இவர்களின் இரட்டை வேஷத்தை தமிழ்நாடு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சிவி சண்முகம் கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளின் இரட்டை வேஷத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 10:46 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தலை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் கூறி அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், "தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் முன்னேறுகிறதோ இல்லையோ, போதைப்பொருள் கடத்தலில் முன்னேறுவதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளாமல் அரை டவுசரை போட்டு கொண்டு ஓடிக் கொண்டு இருப்பதாகவும் தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் கிடைப்பதாக குற்றம்சாட்டினார்.

இஸ்ஸாம் சமூகத்தை சேர்ந்த, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் பாஷா உயிரிழந்த போது, அவரது உடலை அடக்கம் செய்யாமல் எரியூட்டப்பட்டு உள்ளதாகவும், அதே போல் ஜாபர் சாதிக் உயிரோடு கைது செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை தடுப்பதற்குத் தவறியுள்ளது. தவறு செய்தவர்களே திமுக கட்சியில் தான் இருக்கின்றனர். தவறு செய்தது முதலமைச்சராகவும், அமைச்சராக இருந்தாலும் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தவர்களை முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கஞ்சாவை கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் சைக்கிளை எடுத்து கொண்டு ஊர் சுற்றியதாக தெரிவித்தார். திமுகவை சார்ந்த முக்கியமான மாவட்ட பொறுப்பிலிருந்த ஜாபர் சாதிக் 3500 கிலோ போதைப்பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார்.

அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை இதற்கு தமிழ்நாடு அரசு மட்டும் பொறுப்பல்ல, டெல்லியில் ஆளும் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அரசும், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டுபிடிக்கவில்லை.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அரசு தகவல் கொடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஜாபர் சாதிக்குடன் உதயநிதி, மற்றும் அவரது மனைவி கிருத்திகாவிற்குத் தொடர்பு இருந்திருக்கிறது. உதயநிதியின் அறக்கட்டளைக்கு ஜாபர் சாதிக் நிதி அளித்துள்ளார் இல்லை என்று கூற முடியுமா, எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய புலனாய்வு துறை போதைப் பொருள் கடத்தலில் தமிழ்நாடு காவல் துறையை நம்ப வேண்டாம். போதை கடத்தல் குறித்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணி தர்மத்துக்காக வாய் பேசாமல் உள்ளது.

இவர்களின் இரட்டை வேஷத்தை தமிழ்நாடு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், தவறுக்கு குரல் கொடுக்காத கூட்டணி கட்சிகளும் தண்டிக்கப்பட வேண்டும். சிரழிந்து, நிர்வாகம் இல்லாத, போதையின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டுமென்றால் குற்றவாளிகளின் கூடாரமாக உள்ள ஸ்டாலின் அரசு தூக்கி எறிய பட வேண்டும்" என்று சிவி சண்முகம் பேசினார்.

இதையும் படிங்க: மேல்மலையனூர் கோயில் திருவிழா; மார்ச் 14-ல் விழுப்புரத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.