ETV Bharat / state

சீதாராம் யெச்சூரி மறைவு: "அரைக் கம்பத்தில் பறக்கும் கட்சிக் கொடி" - கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு! - cpim k balakrishnan - CPIM K BALAKRISHNAN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடி ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மறைந்த சீதாராம் யெச்சூரி, அரைக் கம்பத்தில் பறக்கும் கட்சிக் கொடி
மறைந்த சீதாராம் யெச்சூரி, அரைக் கம்பத்தில் பறக்கும் கட்சிக் கொடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 8:30 PM IST

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.12) காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளது. மேலும், கட்சி கொடியினை ஒருவார காலத்துக்கு அரைக் கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்துமாறு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 19-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இடதுசாரி கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பல முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வாரம் காலம் துக்கம் அனுசரிக்கிறது. அதன்படி, சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலமானார் சீதாராம் யெச்சூரி.. அரசியலில் கடந்து வந்த பாதை

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, “ கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டு சீதாராம் யெச்சூரி பேசிய உரையை கலைஞரே சிறப்பானது என்று பாராட்டியுள்ளார். பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என பல துறைகளில் சாதனை படைத்து தெளிவான சிந்தனை கொண்டவர்.

இன்று நாடு சந்தித்து வரும் பாசிச அபாயத்தை எதிர்த்து போராடி, வலுவான இந்திய கூட்டணியை உருவாக்க இரவு பகலாக பணியாற்றியவர். இந்த தலைமுறை மட்டுமல்லாமல் இந்திராகாந்தி, கலைஞர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர். இவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. இதை எப்படி ஈடு செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

இந்துதுவா சக்திகளை வீழ்த்த செயல்பட்டவர். வரும் 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லி மத்திய குழு அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக சீத்தாராம் யெச்சூரி உடல் வைக்க உள்ளார்கள். உடல் தானம் செய்துள்ளதால், அன்று மாலை 3 மணிக்கு மேலாக அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்படும். சென்னையில் அவருக்கு விரைவில் இரங்கல் கூட்டம் நடைபெறும்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.