புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர், இதன்படி, இதுவரை 583 நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையில், 330 நபரிடம் விசாரணை நடத்தி நேரடி சாட்சியங்களைப் பெற்றுள்ளதோடு, 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையையும், 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று (ஆக.20) இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தங்களுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மனுவை விசாரித்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : நகைக்கடை, சோப் விளம்பரம் தொடர்பான தமன்னா தொடர்ந்த வழக்கு அடுத்தடுத்து ஒத்திவைப்பு! - Tamannaah ad case