ETV Bharat / state

மதுரையில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு.. மகனின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்! - COUPLE DEATH ON ELECTRICITY - COUPLE DEATH ON ELECTRICITY

COUPLE death on electrocution: மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அறுந்து விழுந்த மின் வயரில் மின்சாரம் தாக்கி கணவர் - மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

COUPLE DEAD BY ELECTRICITY EXECUTION
மதுரையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன் மனைவி (CREDIT-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 4:20 PM IST

Updated : May 11, 2024, 4:56 PM IST

மதுரை: மதுரையில் அறுந்து விழுந்த வயரால் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். கோடையின் கடும் வெயிலில் தவித்து வந்த மதுரைக்கு, நேற்றைய தினம் பெய்த மழை சற்று குளிர்ச்சியூட்டியது எனலாம். இந்நிலையில் மதுரை, டி.வி.எஸ் நகர் அருகே துரைசாமி சாலை பகுதியில் வசித்து வந்தவர்கள் முருகேசன், அவரது மனைவி பாப்பத்தி. இவர்கள் பலசரக்கு கடை நடத்தி வருகின்றனர்.

அன்று இரவு கடையை அடைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவியும், சைக்கிளில் அவர்களது மகனும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது, சந்தான சாலையைக் கடக்கும் பொழுது பலத்த காற்று வீசியதால், மின்சாரம் வயர் அறுந்து தொங்கிய படி இருந்துள்ளதை மகன் பார்த்துள்ளார். இதனால் அவர் ஓரமாகச் சென்றுள்ளார்.

ஆனால், அவரது பின்னால் வந்த தாய் பாப்பாத்தியும், தந்தை முருகேசனும் அதைப் பார்க்காமல் சென்றதால், மின்சார வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே அவரது மகன் கண் முன் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இதைப் பார்த்த அச்சிறுவன் கூச்சலிட்டதில், அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்தனர்.

இதையும் படிங்க:'இனி யார் மனதையும் புண்படுத்தமாட்டேன்' - நீதிபதியிடம் வாக்களித்த சவுக்கு சங்கர்?

Last Updated : May 11, 2024, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.