ETV Bharat / state

திருப்பத்தூரில் சேலஞ்ச் ஓட்டு பதிவு! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: திருப்பத்தூரில் R.அரவிந்த்க்குப் பதிலாக A.அரவிந்த் வாக்களித்ததால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், R.அரவிந்த் சேலஞ்ச் ஓட்டு மூலம் தனது வாக்கினைச் செலுத்தினார்.

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 8:06 PM IST

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியைச் சேர்ந்தவர் R.அரவிந்த்.

இவர் இன்று தனது வாக்கினைச் செலுத்த, அதே பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த A.அரவிந்த் என்பவர், மாறுதலாக R.அரவிந்த் பெயரில் வாக்குச்சீட்டு பெற்று வாக்களித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, R.அரவிந்த் வாக்களிக்க வந்த போது, ஏற்கனவே வாக்களித்துவிட்டதாகத் தேர்தல் அதிகாரிகள் R.அரவிந்திடம் கூறியதால், அதிர்ச்சியடைந்த R.அரவிந்த், இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சேலஞ்ச் ஓட்டு மூலம் R.அரவிந்த் தனது வாக்கினைச் செலுத்தினார். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வாக்கு இயந்திரம் மாற்றி வைக்கப்பட்டதாக கார்த்தி சிதம்பரம் வாக்குவாதம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.