ETV Bharat / state

“தமிழகத்தில் 20 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்”- அமைச்சர் மா.சு. தகவல் - MA Subramanian on drug seize - MA SUBRAMANIAN ON DRUG SEIZE

Minister Ma Subramanian on Drug Seize: தமிழ்நாட்டில் 20 கோடி மதிப்புள்ள 2 லட்சம் கிலோ குட்கா, பான்பராக் பாேன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உறுதிமாெழி எடுக்கும் முதலமைச்சர், அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மாணவர்கள்
உறுதிமாெழி எடுக்கும் முதலமைச்சர், அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மாணவர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 6:21 PM IST

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில், காவல்துறை சார்பில் நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமாெழியை வாசிக்க, கல்லூரி மாணவர்கள் பின் தொடர்ந்து உறுதிமொழியை கூறினர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாணவர்களுடன் பங்கேற்று உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.

இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றல் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சவர் தலைமையில் இன்று நடத்தப்பட்டது. திமுக கட்சி அரசுக்கு வந்ததில் இருந்து, ”போதை பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு” என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை காவல்துறை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறது.

இதில் 2022 ஆகஸ்ட் 10 அன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டு, போதை பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு, போதை பொருள் நடமாட்டமற்ற தமிழ்நாடு என்கிற புதிய பாதை நோக்கி அழைத்துச்செல்லும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பல்வேறு தீர்மானங்களை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் தான் கடந்த 2022 அம் ஆண்டு ஆனஸ்ட் 11 ஆம் தேதி , முதல்முறையாக தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி கல்லூரிகளில் பயிலும் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் போதைப்பொருள் தடுப்பிற்கான மாபெரும் தொடக்கமாக இருந்தது. இந்த முயற்சி (ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்) உலக சாதனையாக படைக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று இந்த உறுதிமொழி நிகழ்ச்சி 70 லட்சம் மாணவர்கள் பங்கேற்ப்புடன், மிண்டும் உலக சாதனையை படைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டடின் உறுதிமொழி நாள் ஆகஸ்ட் 11 ஆம் தேதி கொண்டப்படும் நிலையில், அது ஞாயிற்றுகிழமையாக இருந்த காரணத்தால் இன்று (ஆகஸ்ட் 12) தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 37,592 அரசு பள்ளிகள், 8329 அரசு உதவி பெறும் பள்ளிகளிகள், 11,443 தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 57,364 பள்ளிகளில் ஏறத்தாழ 1 கோடி மாணவர்கள் பங்கேற்கும் வகையிலான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

இவ்வாறு இளைய சமுதாயத்தினரை போதை பழக்க வழக்கங்களில் இருந்து மீட்டெடுப்பதற்கான பல முயற்சிகளில், தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கென மருத்துவத்துறையின் கீழ் செயல்படும் உணவு பாதுகாப்புத்துறை, பல்வேறு துறைகளோடு, குறிப்பாக காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளோடு, ஒருங்கிணைந்து போதைபொருட்கள் விற்பனைக்கு, எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இந்நிலையில், தமிழக அரசு தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற போதை வஸ்துக்களை தடுப்பதற்கும், விற்பனை செய்வதற்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 8,66,619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32,404 கடைகளில் பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

அப்படி கண்டறியப்பட்ட கடைகளில் 20 கோடி ரூபாய்க்கும் மேலான, 2,86,681 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் விளைவாக 17,481 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டது. அதன் மூலம் உணவு பாதுகாப்புத் துறை அபராதமாக 33 கோடியே, 28 லட்சத்து 13 ஆயிரத்து, 200 ரூபாய் வசூலித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக போதைப்பொருட்கள் நடமாட்டம் இல்லாத தமிழ்நாடாகவும், போதைப்பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடாகவும் மாற்றுவதற்கு அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் இந்த நிகழ்ச்சியில் 1 கோடிக்கும் மேலான மாணவர்கள் பங்கேற்று, உலக வரலாற்றில் பெரும் சாதனை படைத்துள்ளனர்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை, கஞ்சா விற்பனை! பிரபல ரவுடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.