ETV Bharat / state

கோவையில் வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 இறைச்சி கடைகள் இயங்க தடை - மாநகராட்சி அறிவிப்பு..!

Vallalar Day 2024: கோயம்புத்தூரில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு
கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 4:37 PM IST

கோயம்புத்தூர்: மிகவும் மதிக்கப்படும் ஆன்மிகவாதியான வள்ளலார் ராமலிங்கம் அடிகளாரின் நினைவு தினமான ஜனவரி 24-ஆம் தேதி வள்ளலார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன், பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்” என்ற புகழ் பெற்ற வாசகத்தை எடுத்துரைத்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படும் வரும் ஜனவரி 24 ஆம் தேதியன்று இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதித்து கோயம்புத்தூர் மாநகராட்சி என்று அறிவித்து உள்ளது.

கோயம்புத்தூரில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இது குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எதிர் வரும் 25.01.2024 அன்று ‘வள்ளலார் தினம்’ அனுசரிக்கப்படுவதால் அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தருமபுரியில் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.