கோயம்புத்தூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண "உங்களைத் தேடி உங்கள் ஊரில் "என்ற திட்டத்தினை அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுமக்களின் குறைதீர்க்க கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை, ஸ்கேட்டிங் கிரவுண்ட் (Skating Ground), அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேசியதாவது, “ முதலமைச்சர் அறிவித்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் இன்று 24 மணி நேரம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமக்களுக்கு சென்று, அரசு அறிவித்த திட்டங்கள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பதில் முதலமைச்சர் ஆகி இருக்க வேண்டியவரா? ஆர்.வைத்திலிங்கத்தின் அரசியல் பயணம்!
கோவையில், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதற்கு பொள்ளாச்சி நகராட்சி குறைந்த கட்டணங்களை வசூல் செய்து சிறந்த நகராட்சியாக செயல்படுகிறது.
மழைக் காலங்கள் தொடங்க உள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்” இவ்வாஅறு அவர் தெரிவித்தார். இதில் சார் ஆட்சியர் கேத்தீரின் சரண்யா,பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் கணேசன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்