ETV Bharat / state

டெல்லியில் பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்திற்காக வைத்த கோரிக்கைகள் என்னென்ன? - cm stalin meets pm modi - CM STALIN MEETS PM MODI

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து, சென்னை மெட்ரோ திட்டம், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுப்பது, பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுவை அளித்தார்.

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 12:54 PM IST

டெல்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து விவாதிக்க நேற்று டெல்லி சென்றார். அதனை தொடர்ந்து இன்று (செப்.27) டெல்லியின் லோக் கல்யாண மார்க்கல் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார்.

அப்போது, சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட பணிகளுக்கான தேவையான நிதி, சமக்ரசிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

சென்னையில், 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ரூ.63,746 கோடி நிதி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணி நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க நேற்று (செப்.,26) டெல்லி சென்றார். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

மேலும், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ரசிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியினை தமிழகத்திற்கு மத்திய அரசு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.