ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா? கருணாநிதி பாணியில் பதிலளித்த ஸ்டாலின்! - Deputy CM Controversy - DEPUTY CM CONTROVERSY

Udhayanidhi Stalin Deputy CM Controversy: உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக கோரிக்கைகள் வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பாணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளது துணை முதல்வர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

முதலமைச்சர், அமைச்சர்
முதலமைச்சர், அமைச்சர் (Credits- Udhayanidhi Stalin X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 8:37 PM IST

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில், முதலமைச்சரின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு அதற்கான முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் தொடர்பான தகவல் குறித்த விரிவான கட்டுரையை தற்போது பார்க்கலாம்.

நான்காம் ஆண்டில் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பொறுப்பேற்று மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டு நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற பின் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இதுவரை மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை: திமுகவில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையே செல்வாக்கு மிகுந்தவராக வலம் வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை இருப்பினும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதேபோல, கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தரப்பிலிருந்து கருத்துகள் வரத்தொடங்கியது. அதனை வெளிப்படுத்தும் விதமாக, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரவேண்டும் என பொதுமக்களும் தொண்டர்களும் விரும்புவதாகக் கூறினார்.

அதேபோல, கடந்த மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு துணை முதலமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே பேசியது கவனத்தை ஈர்த்தது.

இதுமட்டும் அல்லாது, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பின்பு திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது என்று கூறினார்.

இப்படி தொடர்ச்சியாக பல்வேறு நிர்வாகிகளும், அமைச்சர்களும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வரவேண்டும் என தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து வந்தனர்.

உதயநிதியின் மறுப்பு: திமுக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "முதல்வருக்கு நான் துணையாக வர வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களின் அடிப்படையில் நீங்கள் இந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்றும் நான் துணை முதல்வராகப் போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் அதனை நம்ப வேண்டாம்" என பேசினார்.

முதல்வர் முடிவு: தொடர்ச்சியாக துணை முதல்வர் தொடர்பான கேள்வி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், சேகர்பாபு ஆகியோரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது துணை முதல்வர் விவகாரத்தில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என தெரிவித்தனர்.

கருணாநிதி பாணியில் மு.க.ஸ்டாலின்: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.05) நேரில் ஆய்வு மேற்கொண்டார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க பல்வேறு கோரிக்கைகள் வலுத்துள்ளதே என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், "வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை" என கலைஞர் பாணியில் பதிலளித்தார்.

மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், முதலமைச்சரின் இன்றைய பதில் மூலம் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 'நச்' பதில்! - Udhayanidhi Stalin deputy cm issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.