ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்..திரளான பக்தர்கள் தரிசனம்! - Chidambaram Nataraja Temple - CHIDAMBARAM NATARAJA TEMPLE

Chidambaram Nataraja Temple: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று வெகுவிமர்சையாக கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் (CREDIT - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 2:17 PM IST

கடலூர்: உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில் ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ர தரிசன விழாவின்போது மூலவரும் உற்சவருமான நடராஜப் பெருமானே கருவறையிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்ட காட்சி (CREDIT - ETVBharat TamilNadu)

இந்தாண்டு ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமிகள் வீதி உலா என்பது சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, 4ம்தேதி சந்திர பிறை வாகன வீதி உலா, ஐந்தாம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, ஆறாம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா, ஏழாம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா, எட்டாம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, ஒன்பதாம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, பத்தாம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற்றது.

முக்கிய விழாவான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மூலவர்களான ஸ்ரீ நடராஜ மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி சுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேல தாளத்துடன், வேத மந்திரங்கள் ஓதிட தனித்தனி தேர்களில் எழுந்தருளி கீழவீதி தேரடி நிலையில் இருந்து புறப்பட்டது.

பின்னர், நான்கு வீதிகளில் தேர் உலா வருவது வழக்கம். இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிதம்பரத்திற்கு வந்திருந்து நடராஜ பெருமானின் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பலரும் நடராஜ பெருமான் மற்றும் பல்வேறு சுவாமி வேடமிட்டு நடனமாடியும் சிவ மேல வாத்தியங்கள் முழங்க தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேருக்கு முன்னதாக ஏராளமான பெண்கள் கோலமிட்டு சென்றனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காலையில் நகரத்திற்குள் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தேர் திருவிழா முடிவுற்ற நிலையில் நாளை ஆனித்திருமஞ்சன விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! - makkaludan mudhalvar scheme

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.