ETV Bharat / state

16 வயது சிறுமி கொலை; ஊதுபத்தி ஏத்தி நாடகமாடியது அம்பலம்! - CHENNAI BATHROOM MURDER

வீட்டில் பணிபுரிந்த 16 வயதேயான சிறுமியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, நாடகமாடிய குடும்பத்தினரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

chennai teen housemaid murdered by her owner family six arrested news thumbnail
பணிப்பெண் சிறுமி கொலை வழக்கில் இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (கோப்புப் படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 11:15 AM IST

சென்னை: அமைந்தக்கரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வருபவர் முகமது நவாஸ்(35) வீட்டில் தங்கி சட்டவிரோதமாக வேலைபார்த்த 16 வயது சிறுமி குளியலறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, முகமது நவாஸ் தன் வழக்கறிஞர் வாயிலாக அமைந்தகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

முதலில், சிறுமி வேலை முடிந்து குளியலறையில் குளிக்கச் சென்றதாக கூறப்பட்டது. ‌அப்போது நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நாசியா இருவரும் ஓடிச்சென்று கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது சிறுமி தரையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் என்று நவாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் இந்த மரணம் தொடர்பாகக் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சிறுமியின் உடலில் ஆங்காங்கே இருந்த காயங்கள், சிகரெட்டினால் சுடு வைத்த வடுக்கள் இருந்துள்ளன. மேற்கொண்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணையை முடிக்கிய காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமி

அதன்படி, சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஸ், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி நாசியாவும், 6 வயது குழந்தையும் இவருடன் வசித்து வருகின்றனர்.

மனைவிக்கு வேலைப்பழுவைக் குறைப்பதற்காக, சுமார் 14 மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை (வேலைக்கு சேரும்போது சிறுமியின் வயது 14) வீட்டு வேலைக்காக சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தியுள்ளார். சிறுமி இவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். முகமது நவாஸின் சகோதரி வாயிலாகத் தான் இந்த சிறுமி வேலைக்கு சேர்த்துவிடப் பட்டுள்ளார். சிறுமியின் தந்தை காலமானதால், தாயின் அரவணைப்பில் சிறுமி இருந்ததுள்ளார். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டுக்கும் மேலாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்ததும், இந்த சூழலில் கணவன் மனைவி என இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமி

Persons arrested in maid girl murder case
பணிப்பெண் சிறுமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் (ETV Bharat Tamil Nadu)

அதோடு நில்லாமல், முகமது நவாஸின் நண்பரான லோகேஷ் என்பவரும் வீட்டுக்கு வரும்போது எல்லாம் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், தீபாவளி நாளில் தனக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்பதை எதிர்பார்க்காத சிறுமி, காலை எழுந்து வழக்கம்போல வீட்டு வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

ஆனால், முஹம்மது நவாஸ், மனைவி நாசியா, இவர்களது நண்பரான லோகேஷ் ஆகியோர் சேர்ந்து அன்றும் சிறுமியைக் கொடூரமாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் சேர்ந்து சிறுமியை குளியலறைக்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து குளியலறைக்குள் சென்று பார்த்தபோது, சிறுமி உயிர் இழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க
  1. தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த இளைஞர்!
  2. வெளிநாட்டில் இருந்து வந்த ஒரே வாரத்தில் கணவன் கொலை.. 2 ஆயிரம் ரூபாய் பின்னணி?
  3. பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்றபோது விபரீதம்!

ஊதுபத்தி ஏத்தி நாடகம்

இதனால் பயந்து போன கணவன், மனைவி இருவரும் சிறுமியை குளியலறையில் ஊதுபத்தியை ஏற்றி, உடலை அங்கேயே போட்டுவிட்டு, தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பதுங்கியுள்ளனர். பின்னர் லோகேஷ் வாயிலாக வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து, நேற்று முந்தினம் (நவம்பர் 1) மாலை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அமைந்தகரை காவல்துறையினர் கணவன் மனைவியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முகமது நவாஸின் நண்பரான லோகேஷ் (25), அவருடைய மனைவி ஜெய்சக்தி (24) ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

லோகேஷ் மீது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் காவல்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுமியை வேலைக்கு சேர்த்து விட்ட நவாஸின் சகோதரி சீமா (39), அதே வீட்டில் பணிபுரிந்த மற்றொரு பணிப்பெண் மகேஸ்வரி (40) என மொத்தம் ஆறு பேரை அமைந்தகரை காவல்துறையினர் கைதுசெய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி குளியலறையில் சடலமாகக் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

etv bharat tamil nadu whatsapp channel link and QR Code
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.