ETV Bharat / state

"அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு"- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி! - சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு

Chennai Principle Court Ex Minister Senthil Balaji Case: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 7:33 PM IST

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை நாளை (பிப்.16) நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யத் தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையைத் துவங்கக் கூடாது என்றும், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்ற போது செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் எனக் கூறினார்.

இதற்கு அமலாக்கத் துறை சார்பில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டுப் பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ். அல்லி செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காகச் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையைத் தள்ளிவைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மெமோவை பெற்றுக்கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி பின்னர் மெமோவை தற்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி எஸ்.அல்லி கூறினார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் வாதம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.