ETV Bharat / state

“எத்தனை முறை வாய்ப்பளிப்பது?”.. செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு! - Senthil Balaji Cases - SENTHIL BALAJI CASES

Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குற்றச்சாட்டு பதிவை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Senthil Balaaji
செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 8:06 PM IST

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக இன்று (ஆகஸ்ட் 2) செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக உள்ளதால் இந்த மனுவை எண்ணிடுவதற்காக தலைமை நீதிபதி முன்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும், அதுவரை குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து, எத்தனை முறை வாய்ப்பளிப்பது என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கருதி குற்றச்சாட்டுப் பதிவை எப்படி தள்ளிவைக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, புதிய மனு குறித்து வாதிட அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில், அது தொடர்பான வாதங்கள் செந்தில் பாலாஜி சார்பில் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி, குற்றச்சாட்டுப் பதிவை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. நேரில் ஆஜராக உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.