ETV Bharat / state

நாளை சென்னையில் இளையராஜா இசைக் கச்சேரி.. மெட்ரொ ரயில் நிர்வாகம் சிறப்பு சலுகை! - Ilayaraja Live Concert in Chennai

Ilayaraja Chennai Concert: சென்னை நந்தனம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இளையராஜாவின் கச்சேரிக்கு செல்வதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 5:09 PM IST

Chennai
இளையராஜா மற்றும் சென்னை மெட்ரோ ரயில் (Credits - Ilayaraja and Chennai Metro rail 'X' pages)

சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில், நாளை (ஜூலை 14) ‘இளையராஜாவின் - இன்னிசை கச்சேரி’ நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மார்க் மெட்ரோ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

இதன் அடிப்படையில், இசை ஆர்வலர்களுக்கான சிறப்புச் சலுகையாக, கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு (Paytm Insider மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்) பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் (unique QR code) கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும். இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து, மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும்.

இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்குப் பயன்படுத்தலாம் (2 நுழைவு மற்றும் 2 வெளியேறு). மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் மெட்ரோ பாஸ்களை ஸ்கேன் செய்யலாம். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று தடையில்லா பயணத்தை மேற்கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.