சென்னை: சென்னை விமானநிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மொட்ரோ ரயில் சேவைகள் (CHENNAI METRO) வழங்கப்பட்டு வருகிறது. இதில், லட்சக்கணக்கான பயணிகள் நாள்தோறும் பயணம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தீப்பொறி கிளம்பியதாகக் கூறப்படுகிறது. பலத்த சத்தத்துடன் தீப்பொறி கிளம்பியதால், அச்சமடைந்த பயணிகள் ரயிலில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது ரயிலில் பயணித்த வழக்கறிஞர் குணசேகரன் என்பவர் ஈடிவி பாரத்திடம் தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறும்போது, "ரயில் சென்ட்ரல் அருகே சென்றபோது பயங்கர சத்தத்துடன் வெடித்தது போல் இருந்தது.
இதனால், பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். மெட்ரோ நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது சாதாரண தொழில் நுட்பக்கோளாறு தான் என்று கூறினர். உயர்நீதிமன்றம் நிறுத்தத்தில் பத்து நிமிடங்களுக்குப் பிறகு கிளம்பிய ரயிலானது சற்று தூரம் சென்றவுடன் தீப்பொறி கிளம்பியதால் நின்றுவிட்டது.
The technical glitch has been rectified. Metro Train services between Puratchi Thalaivar Dr M.G.Ramachandran Central Metro and Airport Metro station in the Blue Line have resumed normal operations.
We apologize for any inconvenience caused." <="" p>— chennai metro rail (@cmrlofficial) July 10, 2024
மேலும் ஏசி, அறிவிப்பு ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் துண்டிக்கப்பட்டன. இதன் பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன், பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் வெளியேறினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை" என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மாலையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது.
In connection with the technical glitch reported at Puratchi Thalaivar Dr. M.G.Ramachandran Central Metro Station in the evening was promptly rectified. To avoid any delays in Blue Line services, quick action was taken to start operating Metro train services from the third…
— Chennai Metro Rail (@cmrlofficial) July 10, 2024
புளூ லைன் சேவையில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, ரயில் நிலையத்தில் உள்ள மூன்றாவது நடைமேடையில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல ஊடகங்கள் உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தீ விபத்து எதுவும் இல்லை என்பதை மெட்ரோ நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கைகள் பொய்யானவை என்பதை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. மேலும், சென்னை மெட்ரோ பொதுமக்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ளது" என அதிலு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல்முறை.. ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்துக்கு அனுமதி!