ETV Bharat / state

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - TN Weather Update

TN Weather: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை கோப்புப்படம்
மழை கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 3:20 PM IST

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மாவட்டம் மழை அளவு (சென்டிமீட்டரில்)
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 9 சென்டிமீட்டர்
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி)8 சென்டிமீட்டர்
பெருங்களூர் (புதுக்கோட்டை), பாலக்கோடு (தர்மபுரி), மிமிசல் (புதுக்கோட்டை), பொன்னேரி (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), திருமங்கலம் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை)7 சென்டிமீட்டர்
பெலாந்துறை (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), கரூர் (கரூர்), மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), அன்னவாசல் (புதுக்கோட்டை) 6 சென்டிமீட்டர்
கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), குப்பநத்தம் (கடலூர்), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), கல்லந்திரி (மதுரை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), கொத்தவாச்சேரி (கடலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), எண்ணூர் AWS (சென்னை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 5 சென்டிமீட்டர்

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 30 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் (-0.6 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ் (-1.2 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஜூன் 9 முதல் 12 வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 10ஆம் தேதி வரையில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள் - இன்று முதல் 10 ஆம் தேதி வரையில், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள் - இன்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்குபகுதிகள், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையில், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் - இன்று எச்சரிக்கை ஏதுமில்லை. நாளை முதல் 10 ஆம் தேஹி வரையில், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி..மணிலாவில் நிகழ்ந்த சோகம்! - Manila Boat FIRE ACCIDENT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.