ETV Bharat / state

“வெயிலும் உண்டு.. மழையும் உண்டு..” - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்! - TN heatwave today

Heat Wave In Tamil Nadu: வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heat Wave In Tamil Nadu
அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 3:20 PM IST

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ): குளச்சல் (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் 3 செ.மீ மழையும், இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), பெரியாறு (தேனி) தலா 2 செ.மீ மழையும், முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), வத்திராயிருப்பு (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 42.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8 டிகிரி செல்சியஸ், வேலூரில் 41.6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 40.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.6 டிகிரி செல்சியஸ், தர்மபுரி, மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38 டிகிரி - 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழகக் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி - 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23 டிகிரி - 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

மே.1, 2: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே.3 முதல் மே.5 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே.6, 7: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

மே.1 முதல் மே.3 வரை: தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

மே.4,5: அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

மே.1 முதல் மே.5: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மே.1 முதல் மே.3 வரை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 3 டிகிரி - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மே.1 முதல் மே.5 வரை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 39 டிகிரி - 43 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 38 டிகிரி - 40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி - 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

மே.1 முதல் மே.5 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30% - 50% ஆகவும், மற்ற நேரங்களில் 40% - 75% ஆகவும், கடலோரப்பகுதிகளில் 50% - 80% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

மே.1 முதல் மே.3 வரை: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி - 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி - 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி- 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு இன்பச் சுற்றுலா.. மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அசத்தல் ஏற்பாடு! - Melachokkanathapuram Town Panchayat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.