ETV Bharat / state

மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்! அப்படியென்றால் என்ன?

உலகத்தின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற பெருமையைக் கொண்ட மெரினா கடற்கரைக்கு மற்றொரு கூடுதல் அங்கீகாரமாக நீலக்கொடி (Blue flag) சான்றிதழ் கிடைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை மற்றும் நீலக்கொடி சான்றிதழ்
மெரினா கடற்கரை மற்றும் நீலக்கொடி சான்றிதழ் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 7:53 PM IST

சென்னை: உலகின் மிக நீளமான கடற்கரையில் இரண்டாவது இடமும், இந்தியாவில் முதலிடமும் பிடித்திருப்பது சென்னை மெரினா கடற்கரை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மெரினா கடற்கரைக்கு கூடுதல் அங்கீகாரமாக நீலக்கொடி (Blue flag) சான்றிதழ் கிடைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பேசுகையில், "சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழை பெறுவதற்காகவும், கட்டமைப்பு பணிகளை தொடங்குவதற்காகவும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியுள்ளது."

"ஒப்பந்தப்புள்ளி பெறும் நிறுவனம் ஒரு மாதத்திற்குள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான கட்டமைப்பு பணிகளை முடித்துக் கொடுக்க உள்ளனர். அதன் பின்னர், விண்ணப்பம் செய்து டென்மார் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை குழுவினர் சென்னை மெரினா கடற்கரை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று மகேஷ் குமார் தெரிவித்தார்.

நீலக்கொடி பெறுவதற்காக உலகத்தரம் வாய்ந்த வசதிகள் சென்னை மெரினா கடற்கரையில் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நீலக்கொடி சான்றிதழ் என்றால் என்ன? யார் அந்த சான்றிதழ்களை வழங்குவார்கள்? ஏன் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கொடுக்கப்படுகிறது? அதனால் என்ன பயன்? என்பது குறித்து விரிவாகக் காணலாம்.

நீலக்கொடி பட்டியலுக்கு தயாராகும் மெரினா:

நீலக்கொடி சான்றிதழைப் பெற நடைபெறும் கட்டமைப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் 5.62 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. இது நவம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த ஒப்பந்தப்புள்ளியில் தேர்வாகும் நிறுவனம் நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கட்டமைப்பு பணிகளை தொடங்கி விரைவில் முடித்து நீலக்கொடி சான்றிதழை பெறும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

நீலக் கொடி திட்டமானது, ஐக்கிய நாடுகளின் சபை குறிப்பிடும் 17 நிலைதன்மை கொண்ட இலக்குகள் (SDGs), நிலையான வளர்ச்சி திட்டங்களை இணைத்து சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அவை என்ன என்பதை கீழ்வருமாறுக் காணலாம்.

வறுமையை ஒழிக்க: அனைத்து வடிவங்களிலும் வறுமையை முடிவுக்கு கொண்டு வருதல்.

பசி இல்லாத உலகம்: பசியை முடிவுக்கு கொண்டு வருதல், உணவு பாதுகாப்பை அடைதல் மற்றும் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மையை மேம்படுத்துதல்.

நல்வாழ்வு: அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்வையும் நலனையும் உறுதி செய்தல்.

தரமான கல்வி: அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்தல். தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்.

பாலின சமத்துவம்: பாலின சமத்துவத்தை பேணுதல். மேலும், அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தல்.

தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரம்: அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதாரத்தின் கிடைக்கும்தன்மையை உறுதி செய்தல்.

மலிவான மற்றும் தூய்மையான ஆற்றல்: சூரிய மின்சக்தி போன்று மலிவான, நம்பகமான, நிலைத்தன்மை கொண்ட மற்றும் நவீன ஆற்றலின் கிடைக்கும்தன்மையை உறுதி செய்தல்.

பொருளாதார வளர்ச்சி: நிலைத்த பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துதல்.

புதுமையைப் புகுத்துதல்: புதுமையான மேம்பாட்டுப் பணிகளுக்கு அடித்தளம் இடுதல்.

சமத்துவத்தைப் பேணுதல்: உள்நாட்டிலும், பிற நாடுகளுக்கு இடையிலும் சமத்துவத்தைப் பேணுதல்.

நகரங்கள் மற்றும் சமூகங்கள்: நகரங்கள், மனித குடியிருப்புகளை நிலைத்தன்மை கொண்ட பாதுகாப்பான இடங்களாக மாற்றுதல்.

நுகர்வு மற்றும் உற்பத்தி: நிலைத்த நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளை உறுதி செய்தல்.

காலநிலை நடவடிக்கை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவசர நடவடிக்கைகளை எடுத்தல்.

நீருக்குக் கீழ் வாழ்வு: கடல், கடல்சார் வளங்களை பாதுகாத்தல் மற்றும் அவற்றை நிலைத்தன்மை கொண்ட முறையில் பயன்படுத்துதல்.

புவியியல் வாழ்வு: நிலத்தடி வளங்களை பாதுகாத்தல், மீட்டெடுத்தல்.

சமாதானம், நீதி: நிலைத்த வளர்ச்சிக்காக சமாதானத்தை உள்ளடக்கி சமுதாயங்களை மேம்படுத்துதல், அனைவருக்கும் நீதி கிடைக்கும்தன்மையை உறுதி செய்தல், அனைத்து நிலைகளிலும் திறமையான, பொறுப்பான நிலைத்தன்மை கொண்ட நிறுவனங்களை உருவாக்குதல்.

இலக்குகளுக்கான கூட்டாண்மை: நிலைத்த வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டாண்மையை புதுப்பித்தல்.

மேற்கூறப்பட்ட நீலக் கொடி திட்டத்தின் இந்த இலக்குகள், நிலைத்த சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை வழிநடத்துகின்றன என்று நீலக் கொடி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நீலக்கொடி சான்றிதழ் எவ்வாறு வழங்கப்படுகிறது?

சுற்றுச்சூழல் மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், குளிக்க தகுந்த சுகாதாரமான நீர், பாதுகாப்பு உள்ளிட்ட 33 அம்சங்களை மையமாக வைத்து நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்கும் கடற்கரை பாதுகாப்பான சுகாதாரமான கடற்கரை என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதாகவும் இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் அழகிய கடற்கரையாக இருக்கும் கடற்கரையை ஆய்வு செய்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நீலக்கொடி அங்கீகாரம் பெறும் கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பெரும்பான்மையான நாடுகள் நீலக்கொடி சான்றிதழை பெற முயற்சி செய்து வருகின்றனர்.

உலகத்தரம் வாய்ந்த வசதிகள்:

நீலக்கொடி சான்றிதழ் பெற சென்னை மெரினா கடற்கரையில் எல்இடி விளக்குகள், சோலார் பவர் பிளான்ட், சிசிடிவி கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனியே கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள், நடைபாதை, மிதிவண்டி வழித்தடங்கள், விளையாட்டுப் பகுதிகள், படகு துறை, கண்காணிப்பு கோபுரம் என இவை அனைத்தும் மெருகேற்றப்படும்.

இவற்றுடன் பாரம்பரிய தாவர வகைகள் இருக்கக்கூடிய ஆய்வுக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை அரசு செயல்படுத்தும். மேலும், ரூ.1,275 கோடியில் தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில், உலக வங்கி கடன் உதவி வாயிலாக கடலோர மேம்பட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகள்:

உலகளவில் இதுவரை 4154 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தியாவில் இது முதன்முறை அல்ல. இதற்கு முன் ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை, குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர் கடற்கரை, கேரளாவில் உள்ள காப்பாடு கடற்கரை, டையுவில் உள்ள கோக்லா கடற்கரை ஆகியவை இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

மேலும், அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரை, கர்நாடகாவில் உள்ள காசர் கோடு, படுபித்ரி கடற்கரை, ஆந்திராவில் உள்ள ருசி கொண்டா கடற்கரை, தமிழ்நாட்டில் உள்ள கோவளம் கடற்கரை, புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரை ஆகிய 10 கடற்கரைகள் நீலக்கொடிச் சான்றிதழை பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.