ETV Bharat / state

“அரசு விதித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கின்றனர்” தனியார் கல்லூரிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

சென்னை குருநானக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) சார்பில் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 5:46 PM IST

சென்னை: சென்னை குருநானக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், ஏழை எளிய குடும்பத்தில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மன அழுத்தற்குள்ளாகுவதாகவும் கூறி அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) சார்பில் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து பேசிய இந்திய மாணவர் கூட்டமைப்பு தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிகண்டன், “ அரசு நிர்ணயித்த கல்வி கட்டத்தை விட அதிகமான கட்டணத்தை குருநானக் கல்லூரி நிர்வாகம் வசூலிக்கிறது. இது குறித்து மாணவர்கள் சார்பில் கல்லூரி கல்வி இயக்ககத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவி லோகேஸ்வரி போராட்டத்தில் ஈடுப்பட்ட போது, தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

மணிகண்டன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பு இறுதி சுற்று சேர்க்கை ஒதுக்கீடு வெளியீடு

அதனை வேடிக்கை பார்த்துள்ளனர். கல்லூரி மீது வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக மாணவி லோகேஸ்வரியை தேர்வு எழுத விடாமல் தடை செய்தனர். எனவே இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் லோகேஸ்வரியை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். குருநானக் கல்லூரியில் நடக்கும் பிரச்சனையையும், சட்டவிரோத செயலையும் வேடிக்கை பார்க்கும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.