ETV Bharat / state

நடந்து சென்ற சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை.. சென்னை குற்றச் செய்திகள்! - CHENNAI CRIME - CHENNAI CRIME

Chennai Crime News: அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் முதல் நடந்து சென்ற அக்கா, தங்கைக்கு பாலியல் துன்புறுத்தல் வரை சென்னையில் நடைபெற்ற குற்றச் சம்பவத்தின் தொகுப்பு.

சென்னை குற்றச் செய்திகள்
சென்னை குற்றச் செய்திகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 9:59 PM IST

Updated : Aug 20, 2024, 10:06 PM IST

சென்னை: சென்னை, வியாசர்பாடி பி‌.வி காலனியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (35). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, போதைப் பொருள் விற்பனை செய்தல், அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் கடந்த 2020ஆம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வியாசர்பாடி பி.வி காலனி 18வது தெருவில் வசிக்கும் விமலா (50) என்ற பெண் எம்கேபி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, வீட்டில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, ஆசைத்தம்பியை படுக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்‌ மற்றும் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் ஆசைத்தம்பி உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமலாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், இரவு 9 மணிக்கு கொலையைப் பார்த்த விமலா நள்ளிரவு 1 மணிக்கு அடையாளம் தெரியாத நபரின் செல்போன் எண்ணில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், சந்தேகமடைந்த போலீசார் விமலாவைப் பிடித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரவுடி எதற்காக விமலா வீட்டிற்கு வந்தார்? அங்கு அவரை கொலை‌ செய்தது யார்? இந்த கொலையில் விமலாவின் பங்கு என்ன? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : சென்னையில் வசித்து வரும் 44 வயது நபருக்கு, திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த சிறுமி, அவரிடம் இருந்து தப்பித்து தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். உடனே இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், அந்நபரை அழைத்து விசாரணை செய்தபோது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். பின்னர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா விற்பனை: சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர் மலைப்பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருநீர்மலை, நாகல்கேணி, பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.

அப்போது, திருநீர்மலை மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரின் சட்டை பாக்கெட்டை சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியுள்ளது.

பின்னர் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பொழிச்சலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற புன்னை விக்கி (24) என்பது தெரியவந்தது. மேலும், கஞ்சாவை யாரிடம் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தாய் என போலீசார் விசாரணை செய்தபோது, யாரிடமிருந்தும் நான் வாங்கி வந்து விற்கவில்லை. கடந்த ஆறு மாதங்களாக இருசக்கர வாகனத்திலேயே ஆந்திராவிற்குச் சென்று குறைந்த விலையில் கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

பின்னர் விக்னேஷின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில், 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: சென்னையில் உள்ள கடை ஒன்றில் 23 வயது நிரம்பிய பெண்ணும், அவரது தங்கையும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 18ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் இருவரையும் வழிமறித்து ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த 2 பெண்களும் வேகமாக நடந்து சென்றுள்ளனர். அவர்களை பின் தொடர்ந்து மீண்டும் வழிமறித்த அந்த நபர், இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து உள்ளார். இதனால் இரு பெண்களும் கூச்சலிட்டு உதவி கேட்க, உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் மதுரவாயலைச் சேர்ந்த பழனி (43) என்பது தெரியவந்தது.

அத்துடன் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டது உண்மைதான் எனவும் கண்டறியப்பட்டது. பின்னர், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: மருத்துவமனைக்கு வந்த 11 வயது சிறுமியை பூங்காவுக்கு அழைத்து சென்று வன்கொடுமை.. மஹாராஷ்டிராவில் பரபரப்பு

Last Updated : Aug 20, 2024, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.