ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.. சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை - armstrong murder case update - ARMSTRONG MURDER CASE UPDATE

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்(கோப்புப் படம்)
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்(கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 4:22 PM IST

சென்னை: மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கடந்த ஏழாம் தேதி 10 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 15 பேர் குண்டர் தலைப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னும் சில நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அதிரடியாக தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 27 நபர்களில் 25 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி மாலை செம்பியம் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஏழாம் தேதி பத்து நபர்கள் ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட பத்து நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் அவர்கள் 10 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதன் அடிப்படையில் தற்போது மேலும் 15 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, ஹரிகரன், சதீஷ்குமார், ஹரிஹரன் சிவா, பிரதீப், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முகிலன், விஜயகுமார் என்கிற விஜய், விக்னேஷ் என்கிற அப்பு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும் பிரபல தாதா நாகேந்திரன் மகனுமான அஸ்வத்தாமன், ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி ஆகிய 15 நபர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன் பெயரில் 15 நபர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் கடந்த 7-ஆம் தேதி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மொத்தம் 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.