தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் நேரங்கள்: சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30 மணி 9:40, 9.48, 9.56, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 10.56, 11.06, 11.14, 11.22, 11.30, 11.40, 11.50, 12.00, 12.10, 12.20, 12.30, 12.40, 12.50 ஆகிய நேரங்களில் கிளம்பும் 23 மின்சார ரயில்கள் காலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்: ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக, சிறப்பு ரயில்களாக காலை 9.30,9.50,10.10,10.30,10.50,11.10,11.30,11.50,12.10,12.30,12.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை நாளை முதல் ஆகஸ்ட்14ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பீச் ஸ்டேஷன் - பல்லாவரம் சிறப்பு ரயில்கள்: அதேபோல, இரவு 7.15, 7.19, 8.15, 8.45, 8.55, 9.40, 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி தாம்பரம் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், இதற்கு பதிலாக இரவு 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 15 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, 12.00, 12.20, 12.40, 1.00, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்தான முழு விவரங்களையும் பயணிகளுக்கு தென்னக ரயில்வே அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதால், செங்கல்பட்டில் இருந்து சென்னை வரும் பணிகளுக்காகவும், கல்லூரி பள்ளிகளுக்காக சென்னை வருபவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தாம்பரம்: இந்தநிலையில், தாம்பரம் பகுதியில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகர கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் உயர் காவல்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தென்னக ரயில்வே அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள், மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொண்டனர். இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்குவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்து நெரிசல்: மேலும், தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் வரை கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று மாலை போக்குவரத்து கழகம் சார்பாக அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுவாஞ்சேரி முதல் பல்லாவரம் வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்போது அதிகப்படியான பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வருவார்கள் என்பதால், ஜிஎஸ்டி சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் அதற்காக போக்குவரத்து நெரிசல்களை சமாளிப்பதற்கு என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வழக்கறிஞர்கள் மோதல் சம்பவம்: உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை