ETV Bharat / state

சென்னை ஏர்போர்ட்டில் பிக்கப் பாயிண்ட் மாற்றம்.. சிரமத்தில் சிக்கித்தவிக்கும் பயணிகள்.. வாடகை வாகன ஓட்டுநர்கள் கூறும் தீர்வு என்ன? - Chennai Airport Pickup Point issue

Chennai Airport Passenger Pickup Point Relocate: சென்னை விமான நிலையத்தில் வாடகை கார் பிக்கப் பாயிண்டை அடுக்குமாடி கார் பார்க்கிங் மூன்றாவது தளத்திற்கு மாற்றியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயுள்ள நிலையில், பயணிகளின் வசதியாக சென்றுவர மீண்டும் பழைய இடத்திலேயே வாடகை கார் பிக்கப் பாயிண்டை மாற்ற வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக்கப் பாயிண்ட் மாற்றத்தால் சிரமத்திற்கு ஆளாகும் பயணிகள்
பிக்கப் பாயிண்ட் மாற்றத்தால் சிரமத்திற்கு ஆளாகும் பயணிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 6:48 PM IST

சென்னை: இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் விமான சேவை தொடங்கப்பட்டபோது விமானங்களில் வரும் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வந்தது.

சென்னை ஏர்போட்டில் பிக்கப் பாயிண்ட் மாற்றப்பட்ட விவகாரம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் வெளியில் வந்து தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பாய்ண்டில் நின்று வாடகை வாகனங்களில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

இதுபோன்ற சூழலில், கடந்த வாரத்திலிருந்து திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, விமானங்களிலிருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள் சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று மல்டி லெவல் கார் பார்க்கிங் எனப்படும் அடுக்குமாடி கார் பார்க்கிங்கிற்கு சென்று ப்ரீபெய்ட் டாக்ஸி, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும்.

அவ்வாறு பயணிகள் செல்வதற்கு, பயணிகள் வருகை பகுதியிலிருந்து மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் செல்ல இலவச பேட்டரி வாகனங்களை இந்திய விமான நிலையம் ஆணையம் சென்னை விமான நிலையத்தில் இயக்குகிறது. ஆனால், இந்த பேட்டரி வாகனங்கள் போதுமான அளவு இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், பேட்டரி வாகனங்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடத்தின் தரைப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் லிப்ட்கள் மூலம் மல்டி லெவல் கார் பார்க்கிங் இரண்டாவது தளம் இல்லையேல் மூன்றாவது தளம் சென்று வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும் என்று தனியார் மல்டி லெவல் கார் பார்க்கிங் ஊழியர்கள் பயணிகளிடம் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுமட்டும் அல்லாது, மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் மூன்று லிப்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு லிப்டிலும் மூன்று அல்லது நான்கு பயணிகள் லக்கேஜ்களுடன் ஏறியதும் லிப்ட் ஓவர் லோடு ஆகிவிடுகிறது. இதனால் பயணிகள் பேட்டரி வாகனங்கள், லிப்ட்டுகள் ஆகியவற்றிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.

இதற்கிடையே இந்த மாற்றங்கள் குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்பட்டதால் புதிதாக சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் அலைந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை விமானத்தில் பயணிகள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பயணிகளின் பரிதவிப்பு: இது குறித்து சூரத்தில் இருந்து விமான மூலம் சென்னை வந்த பயணி பத்மநாபன் என்பவர் கூறுகையில், "சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான பிக்கப் பாய்ண்ட் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றி இருப்பது பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. நான் இதய நோயாளி இவ்வளவு தூரம் உடைமைகளை தூக்கிக்கொண்டு நடந்து வருவது என்பது மிகவும் சிரமமாக உள்ளது.

மேலும், விமான நிலையத்திலிருந்து கார் பார்க்கிங் பகுதிக்கு இயக்கப்படும் பேட்டரி வாகனங்களும் குறைவாக உள்ளதால் அதனை எதிர்பார்த்து வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அங்கிருந்து நடந்து சென்று கார் பார்க்கிங் பிக்கப் பாயிண்ட் செல்வதற்கு முறையான வழிகாட்டுதல்கள் கூட இல்லை.

இத்தகைய சூழலில், வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உடன் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே விமான நிலையத்தின் பயணிகளுக்கான பிக்கப் பாயிண்ட்டை உரிய இடத்தில் அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

வாகன ஓட்டிகள் வேதனை: பிக்கப் பாய்ண்ட் இடமாற்றம் குறித்து சென்னை விமான நிலையத்தில் வாடகை வாகன ஓட்டுநர்கள் குமார் மற்றும் மணிகண்டன் என்பவர்கள் கூறுகையில், "நாங்கள் பல வருடங்களாக சென்னை விமான நிலையத்தில் வாடகை வாகனம் ஓட்டுகிறோம் முதலில் உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகிலேயே பயணிகளுக்கான பிக்கப் பாய்ண்ட் இருந்தது. இதனால் பயணிகளும் சுலபமாக வாடகை வாகனங்கள் மூலம் பயணிக்கும் நிலை இருந்தது.

ஆனால், கடந்த வாரம் முதல் உள்நாட்டு வருகை பகுதி அருகே இருந்த பிக்கப் பாயிண்டை புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி கார் பார்க்கிங் கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு மாற்றியுள்ளனர். இதனால், பயணிகள் ஒரு கி.மீ தூரம் வரை நடந்து வர வேண்டியுள்ளது. மேலும், நாங்கள் 24 மணி நேரமும் வாடகை வாகனம் ஓட்டுகிறோம் எங்களாலும் மூன்று மாடி கட்டிடத்தை ஏறி இறங்க முடியவில்லை சிரமமாக உள்ளது.

இந்த நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் நடந்து வரும் பொழுது நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென கீழே துடி துடித்து விழுந்தார் அவரை நாங்கள் தான் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.

மேலும், சில பயணிகள் சில விமான நிலையத்தின் பிக்கப் பாய்ண்ட் வெகு தூரமாக இருப்பதால் அதற்கு நாங்கள் சாலைக்கு சென்று ஆட்டோவில் சென்று விடுகிறோம் என கூறுகின்றனர் இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிப்பு அடைகிறது எனவே பழைய பிக்கப் பாய்ண்ட் இடத்திற்கு மீண்டும் மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்" என்று கூறினர்.

விமான நிலைய அதிகாரிகளின் விளக்கம்: இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "மல்டி லெவல் கார் பார்க்கிங் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியிலிருந்து தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து விட்டோம். எனவே இந்த பிக்கப் பாயிண்டுகளும் அவர்கள் தான் நிர்வகிக்கின்றனர். இதையடுத்து தனியார் ஒப்பந்ததாரர்கள் அவர்கள் வசதிக்கு ஏற்ப இந்த மாற்றத்தை செய்திருக்கின்றனர்.

மேலும், சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக கார் பார்க்கிங் பிக்கப் பாயிண்ட் செல்வதற்காக விமான நிலையத்தின் தரப்பில் பேட்டரி வாகனங்கள் போதிய அளவு இயக்கப்படுகிறது தேவைப்பட்டால் கூடுதலான பேட்டரி வாகனங்கள் இயக்கப்படும். மேலும், வாடகை கார் ஓட்டுநர்கள் பிக்கப் பாயிண்டை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மதுரையை சுற்றி இம்புட்டு பொக்கிஷமா? - மக்களை ஈர்க்கும் மதுரை கலைக்கூடம் புகைப்பட கண்காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.