ETV Bharat / state

1.14 ஏக்கர் இருக்கும்போது 800 சதுர அடிக்கு உட்பட்ட திட்டம் நிராகரிப்பா? சென்னை அதிமுக கவுன்சிலரின் பரபரப்பு குற்றச்சாட்டு! - chennai 100 crore land issue - CHENNAI 100 CRORE LAND ISSUE

Chennai 100 crore land issue: சென்னையின் 145வது வார்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை முடக்கியுள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வார்டின் அதிமுக கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை 145-வது  வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன்
சென்னை 145-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 6:50 PM IST

Updated : Sep 2, 2024, 7:13 PM IST

சென்னை: சென்னை 145வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன், தனியார் திருமண மண்டபத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “145வது வார்டில் கடந்த 50 ஆண்டுகளாக 1.14 ஏக்கர் மதிப்புள்ள அரசு நிலம் ஒன்று தனியார் நிறுவனத்திடம் இருந்து வருகிறது. அதை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மனு கொடுத்திருந்தோம்.

சென்னை அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மனுவின் அடிப்படையில், அப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், நிலத்தில் ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதற்காக குத்தகைக்கு எடுத்த நிறுவனம், சுற்றுச்சுவரை மட்டும் கட்டிவிட்டு கட்டடம் எதுவும் கட்டவில்லை என உறுதி செய்தார். இதனால் அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, அந்த இடத்தில் ஒரு சமூக நலக்கூடம், மகளிர் தொழில் மையம் மற்றும் சிறிய பூங்கா அமைக்க வேண்டும் என சென்னை மாமன்றத்தில் கவுன்சிலராக கோரிக்கை வைத்தேன். சமூக நலக்கூடம் அமைக்கப்படும் என மாமன்றத்தில் இருந்து எனக்கு பதிலும் அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் சுமார் 800 சதுர அடியில் ஒவ்வொரு வார்டிலும் அரசு மருத்துவ சோதனை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கள் வார்டில் 800 சதுர அடி அரசு இடம் இல்லை என அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது. எங்கள் வார்டில் 1.14 ஏக்கர் அரசு நிலம் இருப்பது தொடர்பாக நான் நீதிமன்றத்தை நாடினேன். அப்போது நீதிமன்ற இடைக்கால உத்தரவு நகல் ஒன்று வழங்கப்பட்டது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆட்சியர்கள் அந்த இடத்தில் நுழையக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் வட்டாட்சியர் மெளனம் காத்தார். உரிய முறையில் அவர் வாதிடவில்லை. இதனால் இடம் இதுவரை அரசுத் தரப்பிடம் வரவில்லை. இதன் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா? என்பதை அறிந்து அரசு உடனே நிலத்தை மீட்க வேண்டும். இதனால் எங்கள் வார்டில் உள்ள ஒரு லட்சம் குடும்பத்தினர், எந்த வித அரசுத் திட்டத்தையும் பெற முடியாமல் உள்ளனர்” என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!

Last Updated : Sep 2, 2024, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.