ETV Bharat / state

விழுப்புரம் தவெக மாநாட்டில் இந்த 19 பொருட்களுக்கு தடை! - TVK CONFERENCE

விஜய் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு மாநாட்டிற்கு உள்ளே சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

TVK Conference
த.வெ.க மாநாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 7:35 PM IST

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை (அக்.27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடு பணிகள் முடிவுபெற்று தயார் நிலையில் உள்ளது.

மேலும், இந்த மாநாட்டிற்கு மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் த.வெ.க கட்சியினர், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநாட்டுத் திடல் பகுதியில் சுமார் 75 ஆயிரம் நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், த.வெ.க மாநாடு நடைபெறும் இடத்தில் மிக உயரமான கட்-அவுட்டுகள், அதி உயர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வாகன நிறுத்துமிடங்கள், இதரப் பகுதிகள், மாநாட்டுத் திடல் மற்றும் வெளிப்பகுதிகள் என பல்வேறு இடங்களில் சுமார் 1,100 (ஹை பீம்) மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, எந்தவித அசம்பாவிதமும் நடைபெற விதமாக பாதுகாப்பு கருதி, த.வெ.க மாநாடு நடைபெறும் மாநாட்டுப் பந்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நாளை (அக்.27) பட்டாசு வெடிக்கக் கூடாது என த.வெ.க நிர்வாகிகளுக்கு காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி தவெக மாநாடு: தொண்டர்களுக்காக தயாராகும் ஸ்நாக்ஸ் பேக்.. என்னென்ன பொருட்கள் தெரியுமா?

இதற்கிடையில், விஜய் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நாளை (அக்.27) மாநாட்டிற்கு உள்ளே கீழ்க்கண்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • செல்ஃபி ஸ்டிக்
  • மதுபானங்கள்
  • வீடியோ கேமராக்கள்
  • ஃபிளாஷ் லைட் உள்ள கேமராக்கள்
  • ட்ரோன் கேமரா போன்ற ரிமோட் உபகரணங்கள்
  • ஸ்கேட்டிங் ஸ்கூட்டர்
  • சைக்கிள்-பைக் உட்பட இருசக்கர வாகனங்கள்
  • பிளே கார்ட்ஸ்
  • மது அருந்த பயன்படுத்தப்படும் கண்ணாடி டம்ளர்கள் மற்றும் கோப்பைகள்
  • விலங்குகள்
  • சட்டவிரோத பொருட்கள்
  • ரேடியோ தொடர்பு சாதனங்கள்
  • ஆபத்தான பொருட்கள்
  • லேசர் பொருட்கள்
  • ஆயுதங்கள்
  • துப்பாக்கிகள்
  • வெடிபொருட்கள்
  • மற்ற கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்கள்

ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் உடனடியாக த.வெ.க மாநாட்டுத் திடலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், த.வெ.க மாநாட்டுக்கு சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து வயதுடையவர்களும் பங்கேற்கவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாது, மாநாடு நாளை மாலை தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வி.சாலையில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.