ETV Bharat / state

"பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை" - எல்.முருகன் குற்றச்சாட்டு! - l murugan about pm shri school

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 11:10 PM IST

Central Minister L.Murugan : பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து பதில் இல்லை என தமிழக அரசின் மீது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (Credits - L.Murugan X Page, ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு நிகழ்வானது நடைபெற்றது. இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மலிவு விலையில் மருந்துகள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் எனபதற்காக மத்திய அரசின் சார்பில் பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. மார்கெட் விலையை விட பாதிவிலைக்கு, குறைவான விலையில் இங்கு மருந்துகள் வழங்கப்படுகின்றது.

இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்படுகின்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமர்சையாக இன்று கொண்டாடப்படுகின்றது. நாளை மறு தினம் கோவையில் நடைபெறும் விழாவில் நான் பங்கேற்கின்றேன். இந்துகளின் ஒற்றுமைக்காக பாலகங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவங்கினர். தமிழகம் முழுவதும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகின்றது.

மத்திய கல்வித்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினால் அரசிடம் இருந்து பதில் இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கை அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. தாய் மொழி கல்வியை ஊக்குவிப்பது தேசிய கல்வி கொள்கை. இன்று கூட மத்திய கல்வி அமைச்சர் ட்வீட் போட்டிருக்கின்றார்.

யூடியூபர் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து, பாஜக ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராசா பதிலளிப்பார். AI தொழில் நுட்பங்களை நிறுத்த முடியாது. நாளிதழ், டிவி தாண்டி செல்போன் வந்திருக்கின்றது. இப்பொது AI வந்திருக்கின்றது. ஆக்கப்பூர்வமான விடயங்ளுக்கும் பயன்படும். முறையாக நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும்.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு கேலிக்குறியாக இருக்கின்றது. சட்டம் - ஒழுங்கை பற்றி கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியால் சட்டம் - ஒழுங்கு சீர்கெடுகின்றது. என்ஐஏ அலுவலகம் கோவைக்கு வரவும் வாய்ப்பு இருக்கின்றது.

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாரும் செய்தியாளர் என்கின்றனர். இதை முறைபடுத்த நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது. இதற்காக புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கின்றது. இதற்காக பொது மக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது.

செய்தியின் தன்மை, பொது விடயங்களுக்கு ஆக்கப்பூர்வமான செய்திகளை எடுத்து செல்வதாக இருக்க வேண்டும். யூடியூப், இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தேசத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லும் 69 யூடியூப் சேனல்களை முடக்கி இருக்கின்றோம்.

விஜய் கட்சி ஆரமித்து இருப்பதற்கு வாழ்த்து. அவர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை. மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை.
ஊடகங்களில் தான் இது ஊதி பெரிதாக்கப்படுகின்றது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம்: தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முக்கிய உத்தரவு! - parandur airport Project

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.