ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் மத்திய உளவு பிரிவு எஸ்.ஐ திடீர் மரணம்.. நடந்தது என்ன..?

சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த, மத்திய உளவு பிரிவு உதவி ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையம்
உயிரிழந்த மத்திய உளவு பிரிவு உதவி ஆய்வாளர் முருகேசன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 7:58 AM IST

சென்னை: மத்திய உளவு பிரிவான இன்டலிஜென்ட் பீரோ எனப்படும் ஐ.பி (IB) பிரிவில் உதவி ஆய்வாளராக பணியில் இருந்தவர் முருகேசன். 55 வயதுடைய இவர் சென்னை விமான நிலையத்தில் ஐ.பி உதவி ஆய்வாளராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், முருகேசன் நேற்று முன்தினம் (அக்.31) காலை 9 மணி அளவில் விமான நிலைய பணியில் இருந்தபோது, உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் புறப்பாடு பகுதியில் நடந்து சென்றதாகவும், அப்போது திடீரென முருகேசன் மயங்கி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அங்கே நின்ற விமான நிலைய ஊழியர்கள் மற்றும் போலீசார் முருகேசனை அவசரமாக விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முருகேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாய்லாந்து டூ திருச்சி விமானத்தில் 12,400 சிகரெட் பாக்கெட்கள் கடத்தல்!

குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் முருகேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், மாரடைப்பு காரணத்தினாலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பின்பு முருகேசனின் உடல் வேன் மூலம் அவருடைய சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய உளவுப்பிரிவு காவல் அதிகாரி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னை விமான நிலைய ஊழியர்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.