ETV Bharat / state

டிவி சீரியல்களில் வரம்பு மீறும் ஆபாசம்! தணிக்கைக் குழு அமைக்க நீதிமன்றத்தில் மனு! - CENSOR FOR TV SERIALS

தொலைக்காட்சி நாடகங்களைத் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என உத்தரவிட கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம் (ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 5:33 PM IST

மதுரை: தொலைக்காட்சி நாடகங்களில் (சீரியல்களில்) ஆபாச காட்சிகள் அதிமாக வருவதால், அவற்றை தணிக்கை செய்து வெளியிடும்படி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், "தற்போது ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எவ்விதமான தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற தவறான ஒழுக்கங்கள் சீரியல்களில் கற்பிக்கப்படுகின்றன.

அதோடு சில நேரங்களில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. எனவே டிவி சீரியல்கள் முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும், அவ்வாரியத்தின் சான்றிதழை பெற்ற பின்பே அவை ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்யவும், அதனை மீறுபவர்களுக்கு அபராதத்தை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்," எனக் கோரியிருந்தார்.

இதையும் படிங்க
  1. "அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை" - முதலமைச்சர் விளக்கம்!
  2. செல்வபெருந்தகை எல்.எல்.ஏ ஆவது என் கையில்? - அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில் என்ன?
  3. "உ.வே.சாமிநாதர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்" - முதலமைச்சர் அறிவிப்பு!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, "வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்தின் இயக்குநர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.