ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸ் குற்றச்சாட்டு! - Former Minister Senthil Balaji Case - FORMER MINISTER SENTHIL BALAJI CASE

Senthil Balaji Money Laundering Case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 6:17 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் என்பவர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் பலரும் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை செந்தில் பாலாஜி மற்றும் 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. அதன் பின்னர், செந்தில் பாலாஜிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன் மற்றும் அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 2017 ஆம் ஆண்டு இரண்டாவதாக வழக்குப் பதிவு செய்தது. இதில் 4 பேர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இதனை அடுத்து, 2018ஆம் ஆண்டு மூன்றாவது வழக்கை செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அவரின் சகோதரர் அசோக்குமார், சண்முகம், ராஜ்குமார் என்ற ஜெயராஜ்குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டியது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள்மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது.

அதில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேர் வரை குற்றப்பத்திரிகையில் குற்றவாளி என சேர்த்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (ஆக.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி, "கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை" என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தொட்டு பார்த்தா தங்கம்.. வாங்கி பார்த்தா தகரம்... சென்னையில் ஊடுருவிய மாண்டியா கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.