சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்விற்கு, 16 லட்சத்து 33 ஆயிரத்து 730 மாணவர்கள் பதிவு செய்ததில், 16 லட்சத்து 21 ஆயிரத்து 224 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், 14 லட்சத்து 26 ஆயிரத்து 420 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 87.98 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 0.65 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbscresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 38 லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.