ETV Bharat / state

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? - CBSE 10TH RESULT 2024 - CBSE 10TH RESULT 2024

CBSE 10TH RESULT 2024: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயக்கும் பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவர்கள் கோப்புப் படம்
பள்ளி மாணவர்கள் கோப்புப் படம் (CREDIT - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 3:24 PM IST

சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ (CBSE - Central Board of Secondary Education) 10ஆம் வகுப்புக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 25 ஆயிரத்து 724 பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்து 603 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 22 இலட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் நாடு முழுவதும் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 93.12 ஆக இருந்த நிலையில், தேர்ச்சி சதவீதம் 0.48 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 94.75 சதவீதம் மாணவிகளும், 92.71 சதவீதம் மாணவர்களும், 91.30 சதவீத மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 99.75 சதவீதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பெற்றுள்ளது. 99.60 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா மண்டலம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால் மண்டலம் 90.58 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. 99.30 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் சென்னை நான்காம் இடத்தையும் பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பார்த்துக்கொள்ளலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயக்கும் பள்ளிகளில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகளும் இன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு முன் மற்றும் பின் என உளவியல் ஆலோசனைகளை இலவசமாக வழங்கி வருகிறது. நாளை (மே 14) முதல் ஒரு வாரத்திற்கு 24 மணி நேரமும் தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளது. இதில் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், சிறப்பு கல்வியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் உள்பட 65 வல்லுநர்கள் அடங்கிய குழு ஒரு வாரத்திற்கு ஆலோசனைகளை வழங்க உள்ளது. இந்தியாவில் எங்கிருந்தும் 1800-11-8004 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு டயல் செய்து சிபிஎஸ்இ-யின் டெலி கவுன்சிலிங்கை அணுகி உதவி பெறலாம்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ + 2 தேர்வு முடிவுகள் வெளியானது... தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? - CBSE 12TH RESULT 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.