ETV Bharat / state

கடைசி கதவணையை வந்தடைந்தது காவிரி; மலர்தூவி வணங்கி வரவேற்ற மக்கள்! - cauvery water reaches Tamil Nadu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 6:36 PM IST

Updated : Aug 6, 2024, 7:37 PM IST

cauvery water in Tamil Nadu: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், சீர்காழி அடுத்த மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்ததை முன்னிட்டு, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி வணங்கி வரவேற்றனர்.

மேலையூர் கதவணையை வந்தடைந்தது காவிரி
மேலையூர் கதவணையை வந்தடைந்தது காவிரி (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு, பல்லாயிரம் மையில்கள் கடந்து மேலையூரில் உள்ள இந்த கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.

ஒவ்வொரு வருடமும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது இந்த கடைசி கதவனையை வந்தடையும். அந்தவகையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட காவிரி நீர், கடந்த சனிக்கிழமை (ஆக். 3) இரவு 8.10 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது.

மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் உள்ள முதல் கதவணை உள்ள நீர் தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது. நீர்வள ஆதாரத் துறையினர் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் தலைமையில் காவிரி நீரை வரவேற்று, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வினாடிக்கு ஆயிரத்து 100 கன அடி நீரை திறந்து விட்டனர்.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பூம்புகார் மேலையூர் பகுதியில் உள்ள கடைசி கதவணையை வந்தடைந்தது. அப்போது, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு, மலர்தூவி வணங்கி வரவேற்றனர். மேலும், நீரை தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இதனிடையே, நடப்பாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆறு மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2 ஆயிரத்து 20 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது.. ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு மீனவர்கள் கூறியது என்ன?

Last Updated : Aug 6, 2024, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.