ETV Bharat / state

காவிரி துலாக்கட்டத்திற்கு வந்தடைந்த தண்ணீர்.. மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்! - cauvery water - CAUVERY WATER

Cauvery Thula Kattam: உலக புகழ்பெற்ற ஐப்பசி மாத துலா உற்சவம் நடைபெறும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்திற்கு, கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் நேற்று இரவு வந்தடைந்தது.

காவிரி துலாக்கட்டத்திற்கு வந்தடைந்த காவிரி நீர்
காவிரி துலாக்கட்டத்திற்கு வந்தடைந்த காவிரி நீர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 11:32 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் நகரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி துலாக்கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். இங்கு கங்கை முதலான புண்ணிய நதிகளில் பக்தர்கள் தன் பாவச் சுமைகளை போக்குவதற்காக நீராடுவது வழக்கம்.

இதனால் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் இங்கு வந்து ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி சிவபெருமானை வணங்கி பக்தர்களினால் உண்டான தங்களது பாவச்சுமையை போக்கிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

காவிரி துலாக்கட்டத்திற்கு வந்தடைந்த காவிரி நீர் (Credit - ETV Bharat Tamil Nadu)

இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்காவிரியில், மேட்டூரில் திருந்தவிடப்பட்ட உபரிநீர் வந்து சேராததால் ஆடிப்பெருக்கு விழாவைச் சிறப்பாக கொண்டாட முடியாமலும், ஆடி அமாவாசையில் நீராட முடியாமலும் பக்தர்கள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் (3ஆம் தேதி) இரவு மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் நீரொழுங்கி தலைப்பு மதகிற்கு வந்த காவிரி நீர் வினாடிக்கு 1100 கண் அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திற்கு இரவு 8:40 மணிக்கு தண்ணீர் வந்தடைந்தது.

காவிரி நீரை வரவேற்ற மக்கள்: காவிரி நீர் மயிலாடுதுறை நகருக்குள் நுழைவதைக் கண்டு களிக்க இரவு நேரம் பாராமல் பொதுமக்கள் காத்திருந்தனர். பின்னர் ஆற்றில் தண்ணீர் வந்தடைந்தும், உற்சாகக் குரல் எழுப்பினர். இந்த நிகழ்வின் போது காவிரி ஆறு பாதுகாப்புக் குழு அமைப்பினர் முத்துக்குமாரசாமி, அப்பர் சுந்தரம் உட்பட ஏராளமானோர் காவேரி அன்னையே வருக வருக என மலர் தூவி வரவேற்றனர்.

மேலும் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து விவசாயம் செழிக்கக் காவிரி கரையில் உள்ள காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். திங்கட்கிழமை மாலை காவிரியின் கடைசி கதவணை உள்ள மேலையூரை காவிரிநீர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்காக கிளை ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "கர்நாடகா மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டில் விவசாயம் அவ்வளவுதான்" - வைகோ எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.