ETV Bharat / state

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனை பராமரிக்கும் ரயில்வே அதிகாரியின் டிராஸ்பர் ஆர்டர் ரத்து! - CAT on transfer of railway officer - CAT ON TRANSFER OF RAILWAY OFFICER

Southern railway order on transfer: ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியின் இடமாற்ற உத்தரவை மத்திய நிர்வாகவியல் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 7:59 PM IST

சென்னை: ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் இரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த இரயில்வே நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாகவியல் தீர்ப்பாயம் இன்று (மே 20) உத்தரவிட்டுள்ளது.

மத்திய தெற்கு இரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் கவுரிதனயன். இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை கவனிக்க வேண்டும் எனக் கூறி, தெற்கு இரயில்வேயிடம் இடமாற்றம் கோரினார். அதன்படி, அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு, அரக்கோணத்தில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் அரக்கோணத்தில் பணியாற்றி வந்த அவரை, மீண்டும் இடமாற்றம் செய்து இரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தனது மகனை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஓய்வு பெறும் வரை அரக்கோணத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என இரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் நிராகரித்து இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தன்னை இடமாற்றம் செய்த உத்தரவையும், விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவையும் எதிர்த்து கவுரிதனயன், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் சுவாமிநாதன், மாற்றுத் திறனாளிகளை கவனிக்க வேண்டிய தொழிலாளர்களுக்கு இடமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என பணியாளர் நலத்துறை அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க வேண்டியுள்ளதால் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, அவர் தற்போது பணியில் உள்ள பகுதியிலேயே நீடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஜார்க்கண்ட் இளைஞர் உயிரிழப்பு! - Youth Falling From A Train

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.