ETV Bharat / state

கள்ளழகருக்கு சாதிவாரி மண்டகப்படியா? - எதிர்ப்பு தெரிவித்த வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம் - Madurai Chithirai Festival - MADURAI CHITHIRAI FESTIVAL

Madurai Chithirai Festival Kalazhagar function case: சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகரைச் சாதிய ரீதியான தனியார் மண்டகப்படிகளுக்குக் கொண்டு செல்ல தடை விதிக்க கோரிய வழக்கில், கள்ளழகர் திருவிழா பல லட்ச பக்தர்கள் வரக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். எனவே, போதிய பாதுகாப்பு வசதிகளும், அடிப்படைத் தேவைகளையும் அரசு தரப்பில் செய்து கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

case-seeking-a-ban-on-taking-kalazhagar-to-caste-based-private-mantakappati-during-chithirai-festival
மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகரைச் சாதிய ரீதியான மண்டகப்படிகளுக்குக் கொண்டு செல்ல தடை கோரிய வழக்கு முடித்து வைத்தது மதுரை ஐக்கோர்ட்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 5:25 PM IST

மதுரை: சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகரைச் சாதிய ரீதியான தனியார் மண்டகப்படிகளுக்குக் கொண்டு செல்ல தடை விதிக்க கோரிய வழக்கில், கள்ளழகர் திருவிழா பல லட்ச பக்தர்கள் வரக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். எனவே, போதிய பாதுகாப்பு வசதிகளும், அடிப்படைத் தேவைகளையும் அரசு தரப்பில் செய்து கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், கட்டணம் பெற்றுக் கொண்டு சில சாதி அமைப்புக்குச் சொந்தமான தனியார் மண்டகப்படிகளுக்கும், தனியாருக்குச் சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரைக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால், மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் சாதி ரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்களுக்குக் கள்ளழகரைக் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் கள்ளழகரைப் பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "தனியார் மண்டகப்படிகளுக்குச் சாதி ரீதியான அமைப்பு பண்டகப் பணிகளுக்கும்
கள்ளழகரைக் கொண்டு செல்வதால் பொருளாதார வேறுபாடு ஏற்படுவதோடு, தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும் நிலை உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பில், "பல நூற்றாண்டுகளாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாகப் புகார் ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தின் மிகப்பெரும் பாரம்பரிய கொண்டாட்டம். மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியைத் தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே அமையும் பல லட்ச பக்தர்கள் இந்த விழாவிற்கு வருவதால் போதிய வசதிகளையும், பாதுகாப்பையும் அரசு தரப்பில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், மண்டகப்படி விவாகரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால் அதில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மீண்டும் குடியிருப்புக்குள் நுழையும் படையப்பா யானை.. சிசிடிவி காட்சிகள் வெளியானது! - Padayappa Elephant

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.