ETV Bharat / state

பழனி கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பு வழக்கு; இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு! - Palani Kriwala Path encroachment - PALANI KRIWALA PATH ENCROACHMENT

Palani Kriwala Path Case: பழனி கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் வருவாய்த்துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Palani Kriwala Path Encroachment Case
Palani Kriwala Path Encroachment Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 8:26 PM IST

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் உலகப்பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர். இந்த நிலையில், கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாகப் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், தற்போதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கிரிவலப் பாதை அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து 159 கட்டுமானங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே, இவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், தற்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பழனி கிரிவலப் பாதையில் உள்ள வின்ச் ஸ்டேசன், நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு என மொத்தம் 309 ஆக்கிரமிப்பு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பழனி கோயில் மற்றும் கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்குவதில் மாறுபட்ட கருத்து உள்ளது. இதை வருவாய்த் துறையினர், கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், "பழனி கோயில் கிரிவலப் பாதையில், கோயில் நிலங்களில் ஆக்கிரமித்தவர்களுக்கு, மாற்று இடம் வழங்குவதில் நியாயம் உள்ளது. அதே நேரத்தில், கோயில் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதன் தொடர்ச்சியாகப் பேசிய நீதிபதிகள், "பக்தர்களை அழைத்துச் செல்வதற்கு புதிய பேருந்து வாங்குவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, நிறைவேற்ற டெண்டர் விடுவதற்குத் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் முடிந்த ஒரு சில, நாட்களில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும் என கோயில் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறி உள்ளனர்.

ஆகவே, பழனி கிரிவலப் பாதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது, புதிய பேருந்து வாங்க டெண்டர் விடுவது உள்ளிட்ட உத்தரவுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் வருவாய்த்துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: கிராம சபை கூட்டத்தை வீடியோ பதிவு செய்வது குறித்த வழக்கு: பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.