ETV Bharat / state

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு! - lok sabha election 2024

Case registered against Tiruppur BJP candidate: திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் கூறப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 9:07 PM IST

Updated : Apr 5, 2024, 10:28 PM IST

திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்க ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாகத் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லையில், முருகேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தலைமைக் காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் காரை, கண்காணிப்பு நிலைக் குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தி உள்ளனர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவைச் சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கோபமாகக் கேட்டார்.

அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறவே, அவரது பெயரைக் கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டல் தொனியில் பேசினார். அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாகக் கண்காணிப்பு நிலைக்குழுவினர் கூறவே, வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், மரியாதையாகப் பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான வாக்குவாதம் முற்றியதையடுத்து அவர் கிளம்பி சென்றார். இந்த நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து பணி செய்ய விடாமல் அதிகாரிகளைத் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நேர்மையான மத்திய அமைச்சர்கள்! குண்டூசியை கூட விட்டுவைக்காத தமிழக அமைச்சர்கள்? - அண்ணாமலை சாடல் - Lok Sabha Election 2024

Last Updated : Apr 5, 2024, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.