ETV Bharat / state

வாசகர்களுக்கு ஹேப்பி நியூஸ்; இந்த முறை முன்கூட்டியே துவங்கும் சென்னை புத்தகக் கண்காட்சி! - BOOK EXHIBITION

சென்னையில் 48 வது புத்தகக் கண்காட்சி வரும் டிச 27ம் தேதி தொடங்கி, ஜன 12ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 6:04 PM IST

Updated : Dec 9, 2024, 6:25 PM IST

சென்னை : தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 48-வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "48 வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 27ம் தேதி மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளனர்.

பபாசி நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamilnadu)

புத்தகக் கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார். விடுமுறை நாட்களில், புத்தகக்கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

புத்தகக் கண்காட்சி டிசம்பர் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12 வரை 17 நாட்கள் நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்.

பபாசியில் உறுப்பினர் அல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலக தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றனர். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.

உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது.

ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை வீச்சுக்கள் நடைபெற உள்ளது. நிறைவுநாள் நிகழ்வில் நீதிபதி மகாதேவன் கலந்துகொண்டு விழா நிறைவுரை நிகழ்த்த உள்ளார்.

இதையும் படிங்க : "தமிழ்நாட்டில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன" - அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்தாண்டு பொங்கலுக்கு முன்பாக புத்தகக் கண்காட்சியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் விழாவின் போது புத்தகக் கண்காட்சிக்கு மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வருகை தருவதால் இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்பாகவே புத்தகக் கண்காட்சியை முடிக்க உள்ளோம். மழையால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகளின் படி நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.

கடந்தாண்டு புத்தகக் கண்காட்சியில் ரூ.20 கோடி வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. சென்ற ஆண்டு கடைபிடித்த அடிப்படை வசதிகள் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். கடந்தாண்டு பெய்த மழையில் புத்தகக் கண்காட்சி அரங்கில் மழை தண்ணீர் உள்ளே வந்தது. அதுபோல் இந்த முறை நடைபெறாத வகையில், புத்தகக் கண்காட்சி மேற்கூரைகள் தரமாகவும், புத்தகம் வைப்பதற்கான இடங்கள் உயரமாக அமைக்கவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாசகர்களுக்கான நுழைவு கட்டணம் ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.10 லட்சம் விலையில்லா டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் புத்தக வாசிப்பாளர்களை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாக, புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. புத்தகக் கண்காட்சியில் சுமார் 10 ஆயிரம் கார்களும், 50,000 இருசக்கர வாகனங்களும், நிறுத்தும் அளவிற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள பதிப்பாளர்களுடன், புதியதாக 70 பதிப்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், புதிய உறுப்பினர்களையும் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறிய பதிப்பாளர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

Last Updated : Dec 9, 2024, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.