கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளி நிர்வாகத்திற்கு இன்று காலை இ மெயில் வந்துள்ளது.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக இது குறித்து கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் காவல் துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
புரளியால் பரபரப்பு: இதனால் மாணவர்கள் அனைவரும் வகுப்புறையில் இருந்து வெளியேற்றப்பட்டு பள்ளி மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். மேலும் போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பள்ளியில் சோதனை ஈடுபட்ட நிலையில் அந்த இ மெயிலில் கூறப்பட்டது போல் எந்த விதமான பொருட்களும் கைப்பற்றப்படாததால் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: விமான சாகச நிகழ்ச்சி: ஐந்து பேர் இறப்புக்கு என்ன காரணம்? - அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!
விசாரணையில் அதிகாரிகள்: கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (அக்.5) இதே போல் 3 நட்சத்தர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடந்து தற்போது இந்த பள்ளிக்கும் இது போன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. எனவே இது போன்ற போலியான வெடிகுண்டு மிரட்டல் கொடுப்பது யார், என்ன நோக்கம் என்பது குறித்து கோவை உதவி ஆணையர் கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்