ETV Bharat / state

உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு வழங்கிய 62 வயது மூதாட்டி! - ORGAN DONATION in Ooty - ORGAN DONATION IN OOTY

62 Year Old Woman Organs Donated In Ooty: உதகையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடைய மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலமாக 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியின் உடல் மற்றும்  தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள் எடுத்துச் செல்லப்படும் காட்சிகள்
மூதாட்டியின் உடல் மற்றும் தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள் எடுத்துச் செல்லப்படும் காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 2:51 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை சென்மேரிஸ்கில் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் - எமிலி தம்பதி. இவர்களுக்கு பிரான்சிஸ் கில்பர்ட், கென்னி நெல்சன், கிளமெண்ட் என 3 மகன்களும், ரெஜினா மேரி என்ற ஒரு மகளும் உள்ளனர். எமிலியின் கணவர் லாரன்ஸ் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், 62 வயதான எமிலி தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் எமிலி மயங்கி விழுந்து, சுயநினைவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் உதவியுடன் எமிலியை மீட்டு உதகையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மூதாட்டி எமிலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, எமிலி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மூதாட்டி எமிலிக்கு முடிந்தவரை சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனளிக்காமல் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது. மேலும், மூதாட்டியின் மூளைப் பகுதியில் ரத்தம் உறைந்து மூளைச்சாவு ஏற்பட்டதை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மூதாட்டி எமிலியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, எமிலியின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தலைமையில் மருத்துவர்கள் ரவிசங்கர், வினோத் குமார், மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உடல் உறுப்புகளை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், எமிலியின் கண்கள் கோவையில் உள்ள சங்கரா கண் மருத்துவமனைக்கும், கல்லீரல் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கும், சிறுநீரகம் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன. இதன் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மூதாட்டி எமிலியின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா, உதகை அரசு மருத்துவமனையின் முதல்வர் கீதாஞ்சலி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதுமட்டுமல்லாது, மூதாட்டியின் உடலை மருத்துவமனையில் இருந்து வெளியே எடுத்துவரும் போது செவிலியர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டர்.. சென்னைையில் அதிகாலை நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.