கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் 'விருட்சம்' எனும் அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் துவக்க விழா பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “புவி வெப்பம் அடைவதை தடுக்க காடுகளை உருவாக்குவது, மரம் நடுதல் உள்ளிட்ட பல சுற்று சூழல் நிகழ்வுகளை கோவை தெற்கு தொகுதியில் செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: “உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்" - தீர்மானம் நிறைவேற்றிய திமுக மூத்த அமைச்சர்!
கோவையில் சிறு, குறு தொழில்துறையினர், ஜவுளி மற்றும் விவசாயத் துறையினர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே முதல்முறையாக இது போன்ற நிகழ்ச்சி கோவையில் நடத்தப்படுகிறது. இதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மக்கள் சேவை மையம் மூலம் ஏழை பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கியுள்ளோம். அவர்களில் 1500 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நாளை மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
திருமாவிற்கு கூட்டணியில் என்ன பிரச்சனை என தெரியவில்லை. பட்டியலினம் சார்ந்த பிரச்னைகள், பட்டியலின மாணவர்கள் மீதான தாக்குதல் என பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில். மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து விசிக புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவோ அல்லது கூட்டணியில் உள்ள திமுகவிற்கு ஏதோ ஒரு செய்தியை சொல்வதாக தான் இதை பார்க்கிறோம்.
கொங்கு மண்டல வளர்ச்சிக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பல்வேறு உதவி செய்து வருகிறார். குறிப்பாக அவர் ராணுவ அமைச்சராக இருந்த போது கோவையில் ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்தினார். GST பிரச்னை என்றாலே மோடி தான் காரணம் என்கிறார்கள். இது மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செய்வது. GST கவுன்சிலுக்கு தலைமை மத்திய அரசு என்றாலும். மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலோடு தான் வரி அமல்படுத்தப்படுகிறது.
கார் பந்தயத்தை மாநில அரசு ஊக்குவிப்பதில் தவறில்லை. இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட் கேபிடல் கோவை தான். இது கவனிக்கப்படாமல் உள்ளது. கோவைக்கும் கார்பந்தயங்கள் வந்தால் வரவேற்கிறோம். இதனால் பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் இருக்க கூடாது.
படிக்கும் மாணவிகள் மீது பாலியல் சீண்டல் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது.அவர்கள் புகார் அளிக்குன் போது அடையாளங்களை வெளியே தெரியாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு இரண்டு விதமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. வெளிபடையாக சட்ட விரோத மதம் மாற்றம் குறித்து பேசுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் முதல்வர் எடுப்பதில்லை.
திமுக சிறுபான்மை என்றால் ஒரு நிலையை எடுக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து கூறவில்லை. வாக்கு வங்கிக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு வாழ்த்து கூறுகிறார். ராகுல் காந்தி அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவிலும் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.