ETV Bharat / state

"தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை பாஜக கைப்பற்றும்; பாஜகவிற்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு" - அண்ணாமலை! - Parliament election 2024

BJP Tamil Nadu Leader Annamalai: நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் எனவும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

BJP Tamil Nadu Leader Annamalai
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை பாஜக கைப்பற்றும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 8:16 PM IST

"தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை பாஜக கைப்பற்றும்; பாஜகவிற்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு" - அண்ணாமலை!

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமான மூலம் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர், "பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மு.க.ஸ்டாலினுக்கு செலெக்ட்டிவ் அம்னீஷியா.

மத்திய அரசு மீது குற்றம் சாட்டும் முன்பாக, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. திமுகவின் அயலக அணியில் உள்ளவர் தான் ஜாபர் சாதிக் என்றாலும் அது குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார்.

ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதற்காக டெலிட் செய்தார். டிஜிபியை பலிகடா ஆக்க திமுக பார்க்கிறது. சிறு, குறு தொழில் முனைவோர்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருவதாகவும், மீண்டும் பாஜக தலைமையில் மத்திய அரசு அமையும் போது அனைத்து பிரச்னைகளும் தீரும்.

கொங்கு மண்டலத்தில் பாஜக: கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

பாஜகவிற்குப் போடும் ஓட்டு வளர்ச்சிக்கான ஓட்டு: பாஜக ஓட்டு செல்லாது என சொல்கின்ற கட்சியிடம் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேளுங்கள் அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் எம்பிக்கள் டெல்லிக்குப் போய் யாரிடம் மனு கொடுப்பார்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டு மனுவைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? பாஜகவிற்குப் போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு.

கோவையில் மட்டுமின்றி பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பப்பட்டாலும், ஒரு மாநிலத் தலைவராகத் தனக்குப் பல்வேறு கடமைகள் இருக்கிறது. தனக்குள்ள வேலை மற்றும் சங்கடங்கள் என அனைத்தையும் தேசியத் தலைமையிடம் சொல்லி இருக்கும் சூழலில் இதையும் மீறி தேசியத் தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். தமிழகத்தில் திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ள சூழலில், இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சிக்குத் தேர்தல் பத்திரம் மூலம் அதிகப் பணம் வந்துள்ளது என்றால் அது திமுகவிற்குத் தான்.

தேர்தல் விஷயத்தில் எல்லாப் பணப் பரிவர்த்தனைகளுக்கும் காசோலை மூலமாகத்தான் பாஜக பணம் கொடுக்கிறது. அதே வேளையில் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் அப்படி இல்லை. மகளிர் தினம் ஆண்டில் ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடாது. 365 நாளும் மகளிரை ஏன் கொண்டாட மாட்டேன் என்கிறோம் என கேள்வி எழுப்பினார்.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியும் நீங்களும் ஒரே விமானத்தில் வந்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, அவர் வந்தது தனக்குத் தெரியாது. அதற்கும், எனக்கும் எந்தவித முடிச்சும் போட்டு விடாதீர்கள் என்றும் நகைப்புடன் தெரிவித்தார்.

ஆ.ராசா கருத்து: ஆ.ராசா குறித்து கால் வெளியிட்ட 2ஜி ஆடியோவை அவர் மறுக்கட்டும். நான் அரசியலை விட்டேன் விலகுகிறேன். ஆ.ராசா பிரதமரைக் குறித்து மேடையில் பேசியவற்றைக் கண்டு மக்கள் சிரித்துக் கொண்டுள்ளனர். இதைப் பேசுவதற்கு எந்தவிதத் தார்மீகத் தகுதியும் அவர்களுக்கு இல்லை என்றார்.

இதையும் படிங்க: சர்வதேச மகளிர் தினம்: நீதித்துறையில் சாதித்த பெண்கள் கூறும் தாரக மந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.