ETV Bharat / state

மொத்தமா மாறுதே.. போனில் அழைத்த ஸ்டாலின்.. ஓகே சொன்ன அண்ணாமலை.. கூட்டணி கட்சிகள் கப்சிப்? - k annamalai - K ANNAMALAI

MK Stalin invited Annamalai: எதிர் எதிர் துருவங்களான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் - முதல்வர் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசியது என்ன? அரசியலில் அடுத்தகட்ட நகர்வு துவங்கிவிட்டதா? என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை (கோப்புப்படம்)
ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 4:15 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.100 மதிப்பில் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடும் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அதே நேரத்தில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ''முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு கால சாதனையாக ரூ.100 நாணயம் வெளியிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

நாணயம் வெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசி மூலமாக அழைத்து, இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொண்டார். பாஜகவைப் பொறுத்தவரை, இதனை நாங்கள் அரசியலாகப் பார்க்கவில்லை.

ஏனெனில், கருணாநிதிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும். அந்த விழாவில் நானும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்போம். மத்திய அரசே அனுமதி அளித்து நாணயம் வெளியிடுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறோம். கருணாநிதிக்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்'' என்றார்.

மேலும், கட்சி அடிப்படையில் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கால கட்டங்களில் உழைத்துள்ளார். ஆகவே, பாஜக கட்டாயம் விழாவில் பங்கேற்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அரசு நிர்வாக ரீதியாக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் பெரும் மோதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. ஆளுநர் அளிக்கும் சுதந்திர தின விழா தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்க மாட்டோம் என திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தது. இது ஒருபுறம் இருக்க, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் நகர்வாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வந்து வெளியிட உள்ளதால், இந்த நேரத்தில் ஆளுநர் உடனான மோதலை முதல்வர் தவிர்த்து கொள்கிறாரா என்ற கேள்வி எழும்புகிறது.

இதையும் படிங்க: 'போதையில் இருந்து நமது இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்' - சுதந்திர தின வாழ்த்தில் ஆளுநர் ரவி கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.