ETV Bharat / state

நெருக்கடிகள் வரும் போது மற்ற கட்சிகள் பாஜக மீது பழி போடுகின்றன: வானதி சீனிவாசன் கருத்து!

Vanathi Srinivasan: பாஜக கூட்டணி தொடர்பாக தலைமை முடிவு செய்யும் எனவும், குழு அமைக்கும் வரை எதுவும் பேச முடியாது எனவும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறினார்.

Vanathi Srinivasan
வானதி சீனிவாசன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 10:54 AM IST

வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: பாரதிய ஜனதா கட்சியின் மாநில நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(பிப்.4) கோவையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. வரும் தேர்தலுக்கான பிரச்சார யுத்திகள், கட்சிக்குள்ளான உறவுகளை மேம்படுத்துவது, கட்சியின் பல்வேறு அணிகளை ஒருங்கிணைப்பது, பிரதமரின் செயல் திட்டங்களைக் கொண்டு செல்வதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்த வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டது.

இதைத் தவிர நாடாளுமன்றத் தொகுதியின் பொறுப்பாளர்கள் உடைய பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த தகவல்களும் பகிரப்பட்டது. அடிமட்ட அளவில் பொதுமக்கள் மத்தியில் பாஜக குறித்தும், பிரதமர் குறித்த பிரபலம் மேம்பட்டு வருகிறது. இதை எவ்வாறு தேர்தலுக்காக ஒருங்கிணைப்பது என்பது இன்றைய கூட்டத்தின் சாராம்சமாக இருந்தது.

வேட்பாளர்கள் குறித்த கேள்விக்கு, "வேட்பாளர்கள் குறித்து இந்த கூட்டத்தில் எந்த கருத்தும் பகிரப்படவில்லை. ஆனால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்பு எவ்வாறு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர்கள் தவிர்த்து எவ்வாறு தேர்தல் பணிகள் செய்ய வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

நீலகிரியில் எல்.முருகன், கோவையில் அண்ணாமலை நிற்பது குறித்த கேள்விக்கு, "வேட்பாளர்களை பொருத்தவரை தேசிய தலைமை அறிவிக்கும் வரை யாரும் அது குறித்து கருத்து சொல்ல வாய்ப்பில்லை. தேசிய தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவருடைய வெற்றிக்காக கட்சி ஒட்டுமொத்தமாக பாடுபடும். கூட்டணியாக இருந்தாலும், தனித்து இருந்தாலும் ஒரு கட்சி தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்ற பொதுவான வழிகாட்டுதல்கள் ஒரே போல தான் இருக்கும்."

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஐந்து லட்ச ரூபாய்கான மருத்துவ காப்பீடு வழங்கக்கூடிய ஆயுஷ்மான் பாரத் திட்டம் மத்திய அரசால் வழங்கப்பட்டு மிக சிறப்பாக செல்லக்கூடிய ஒரு திட்டம். தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு லட்ச ரூபாய்கான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது.

இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொடுக்கப்படக்கூடிய அட்டைகளில் பிரதமரின் காப்பீடு திட்டம் என்கிற வாசகம் எங்குமே இல்லை. சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு என மட்டுமே உள்ளது. நடமாடும் சேவை வாகனம் மூலமாக எனது தொகுதியில் உள்ள மக்களுக்கு ஐந்து லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு அட்டையை வழங்குகிறோம்.

அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றால் இது செல்லாது முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வாருங்கள் என கூறுகின்றனர். இந்த மருத்துவமனைகள் ஏற்கனவே இந்த மருத்துவ காப்பீட்டை கொடுத்திருந்தனர்.

இது குறித்து கேட்டபோது முதலமைச்சரின் அட்டை இருந்தால் மட்டுமே காப்பீடு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதற்கு மாநில அரசு முழு பொறுப்பேற்று ஆயுஷ்மான் பாரத் என்கிற அனைவருக்குமான ஐந்து லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்க அறிவுறுத்த வேண்டும்.

கொங்கு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் பேசிய போது பாஜகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன கிழித்தார்கள் என பேசியுள்ளார் இது குறித்த கேள்விக்கு, அவரைப் போல் பேச நான் விரும்பவில்லை. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தொகுதியில் மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். எம்எல்ஏக்களின் கோரிக்கையை அவர் கூட்டணியில் இருக்கக்கூடிய மாநில அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பது குறித்து அவருக்கே தெரியும்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை: மாநில முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பொதுமக்கள் ஆர்வமாக கட்சி அலுவலகங்களில் வந்து உறுப்பினர் அட்டை வாங்கிச் செல்வது அதிகமாகி வருகிறது.

பிரதமர் வருகை: பிரதமரின் தமிழக வருகை உறுதியாகியுள்ளது. ஆனால் தேதி தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை.

பாஜகவுக்கு வரச் சொல்லி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம் குறித்த கேள்விக்கு, "ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதற்கு முறையாக பதில் அளிக்காமல் ஒரு மாநில முதலமைச்சர் புறக்கணிப்பது சரியான நடைமுறை கிடையாது. இது போன்ற நெருக்கடி வரும்போது பாஜக மீது கட்சியில் சேர சொல்வதாக பழி சொல்கின்றனர்".

கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு, "மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முதலில் கோயம்புத்தூருக்கு வருவதாக சொல்லட்டும். பின் அவரது யூகத்தை நான் பார்க்கிறேன்".

பாஜக கூட்டணி: கூட்டணி தொடர்பாக டெல்லி தலைமை முடிவு செய்யும். அவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அவர்கள் குழு அமைக்கும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 23 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: கவலையில் மீனவர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.