ETV Bharat / state

"ஜி.எஸ்.டி, மழைவெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து தேர்தல் அறிக்கை" - கனிமொழி தகவல்! - Parliament elections 2024

DMK election Manifesto team: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அறிக்கை தயாரிக்கும் கருத்து கேட்புக் கூட்டத்தில் ஜிஎஸ்டியில் உள்ள குளறுபடி, மழை வெள்ள பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து மனுக்கள் அளிப்பதாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 1:31 PM IST

கனிமொழி எம்பி பேட்டி

கன்னியாகுமரி: 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில், 11 பேர் கொண்ட குழு அமைத்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்கும் பணிகளை கடந்த 5ஆம் முதல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, தூத்துக்குடியில் இந்த ஆலோசனைக் கூட்டம் துவங்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (பிப்.6) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள், மீனவப் பிரதிநிதிகள், வணிக சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பு மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

அக்கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்களைச் சந்தித்து மக்களின் கருத்துகளைப் பெற்று, மக்களின் தேர்தல் அறிக்கையாகத்தான் திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்றும், ஆளும் மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை சிதைத்துக் கொண்டு வருகிறது என்றும், மேலும், நிச்சயமாக நமது முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி ஆட்சி மாற்றம் நாட்டில் உருவாகும். இந்த நாட்டை மீட்டெடுக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கும், மக்களை ஒற்றுமையாக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் என்றும் அவர் பேசினார்.

பின்னர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற பின்னர், திமுக தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, "திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையை மக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள் என்னவென்று கேட்டறிந்து, தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதுதான் வழக்கம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கனமழையால் கஷ்டப்படக்கூடிய விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உதவியும், நிதியும் கொடுக்கவில்லை. வெள்ள சேதங்களை மத்தியக் குழு மற்றும் மத்திய நிதி அமைச்சர் ஆகியோர் நேரில் பார்வையிட்ட பிறகும்கூட மக்களுடைய துயரத்தை துடைப்பதற்கு அவர்கள் முன்வரவில்லை.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருதை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உணர முடியும். குறிப்பாக, ரயில்வே துறை மேம்பாடுகளுக்காக வட மாநிலங்களுக்கு அதிகப்படியான நிதியும், தென் மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் வழங்கப்படுகிறது. எனவே, மத்தியில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி அகற்றப்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும்.

மதவாதம் செய்யும் பாஜக ஆட்சி மாற்றப்படும். மக்களையும், மாநில உரிமைகளையும் மதிக்கக்கூடிய, பாதுகாக்க கூடிய அரசு உருவாகும். அப்படி மாறும் அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கையில்தான் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாக" கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ஒரு நாடு ஒரு தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியபோது, "ஒரே கட்டமாக ஒரு தேர்தலை நடத்த முடியாது. மாநில அரசுகளை கலைத்து விட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு, ஒரே மதம் இவற்றை ஒன்றாக மாற்றுவது என்பது மாநிலத்தின் அடையாளங்களை அழிப்பதற்குத்தான் பயன்படுமே தவிர, அது எந்த வகையிலும் நாட்டின் ஒற்றுமைக்கு பயன்படாது" என பேசினார்.

இதையும் படிங்க: அன்ஃபிட் அரசியல்: அண்ணாமலையின் நகர்வு என்ன? டி.ஆர். பாலு என்ன செய்ய போகிறார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.