டெல்லி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தில், திமுக சார்பில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூடடம் கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தலைமை வகித்தார். அப்போது பேசிய மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், மேலும் மூத்த பத்திரிகையாளர் எழுதிய மோடி சொன்ன பொய்கள் புத்தகத்தையும் தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு! - Mayiladuthurai CandidateR Sudha